வைத்தியம் மருந்துவமாகிறது
மருந்து மாபியாவின்
விருந்துண்ண பழகியது
வருந்தி வந்தவனுக்கு
மருந்து விருந்தாகிறது
வருந்தி வந்தவன்
மருந்திற்கு விருந்தாகிறான்
விருந்து கொடுத்தவன் உயிரை பறிக்கிறான்
விருதுண்டவன் உயர பறக்கிறான்
விருந்தானவன் உயிரை இழக்கிறான்
No comments:
Post a Comment