Wednesday, March 9, 2022
ஆக்கிரமித்துக்கொள் ஆங்கிலேயனே
ஆக்கிரமித்துக்கொள் ஆங்கிலேயனே
வி(மர்)சனப்பார்வை
வி(மர்)சனப்பார்வை
In Dependant's வளா
In Dependant's வளா
தீயான தணல்
தீயான தணல்
-------------------------
Thursday, December 17, 2020
எதிர்ப்பில் எழும்பு
எதிர்ப்பில் எழும்பு
............................
சரித்திரம் எமக்கு சங்கடம் எதற்கு
முளையில் முடித்திட துடித்தனர் துஷ்டர்
இலைகள் வெளிவர இன்னமும் குரைத்தனர்
இழப்புகள் ஒவ்வொன்றும் முழுப்புகழ் தந்தன
களைத்திடா கயவர் இளைத்தனர் இன்னல்கள் இன்னுமே முளைத்திடாவென் றெண்ணி
களிப்புடன் தொடங்கிய கயமை
கிலிப்புடன் துணிந்தது தொலைத்து முடித்திட
விழிப்புடன் விட்டகன்றார் பிறப்பிடம் துறந்தே
வெறுப்பினில் உச்சத்தில் அச்சத்தை உணர்ந்தனர்
உருக்கொண்ட பேயாட்டம் தேடியே போனது இருக்கின்ற இடம்நாடியே
ஒரு சேர் பெரும்பாவிகள் பெரும்போர் பலசெய்தும் அரும்உயிர் பலகுடித்தும்
விரும்பியது சேராது விரும்பாமை விளைத்தனரே
நலம்நாடி வந்தவரை பலம்கூடி தடுத்த மாந்தர் மறுவருசம் வலம்வரும் வேளை புலம் துறந்து மறைந்தாரே
சிலவருசம் பலம்கொண்டு புலம்நாடி வந்தவேளை தலைகாக்க தவம் வேண்டி தலைகவிழ்த்து சரணமானனரே
சரித்திரம் எமக்கு சங்கடம் எதற்கு
தரித்திரம் கொண்டவரின் நரித்தனங்கள்
விரியட்டும் செங்கம்பளமாய் வெற்றியின் பாதை நோக்கி
சரித்திரம் நமக்கு சங்கடம் எதற்கு
எதிர்ப்புகள் எம்மை எழுப்பட்டும் உறக்கம் கலைந்திட
எதிர்ப்பில் எழும்பு
Thursday, February 27, 2020
நாற்பதின் நடுவே
நடுப்பகல் தாண்டி நகர்கிறது
நாளை என்பது நேற்று ஆகிறது
தடுமாற்றம் தன்மாற்றமாகிறது
தவிக்கிறதே நாளைகள் வேண்டி
ஆதவன் ஓடுது அஸ்தமனம் தேடி
இதோயிவன் இளமையை இழந்து
இனித்தான் வாழ்வேவென்றெண்ணி
நகல் வாழ்வே நிஜமெனக்கருதி
அசல் வாழ்வின் விளைகாலமென
உணருமுன்னே தள்ளியதே பருவம்
சுழன்ற வலிமை சுருண்டு வீழுதலில்
மதமையில் திழைத்தே மரித்திட்ட காலங்கள்
மீழாதேவொரு போதும் இனியிந்த பொய்கையில்
Thursday, January 9, 2020
சிறுத்த எறும்பின் சுறுசுறுப்பு
ஆங்காங்கே சிற்சில குறைபாடுகள் அவதானிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட வேலைகளுக்கு மேற்பார்வையாளர்களை நியமிக்க பரிந்தரைக்கப்படுகிறது.
இப்போது முன்பைவிட முன்னேற்றம் தெரிகிறது.
மேற்பார்வையாளரின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். தொடர்ந்து கீழ்நிலை, நடுநிலை உயர்நிலை முகாமையாளர்கள் உருவாகினர். பிரதி பொது முகாமை, மேலதிக பொ. மு, உடன் பொது முகாமையாளரும் நியமனம் பெறுகிறார். இவர்களையெல்லாம் சிறப்பாக கையாள வேண்டி எறும்பு வள முகாமைத்துவ பிரிவும் உருவாகியது. அதற்கும் மே. பொ.மு விலிருந்து அலுவலக உதவியார் வரை அனைவரும் நியமிக்கப்படுகின்றனர்.
அத்தோடு எறும்பு வள அபிவிருத்தி மற்றும் பயிற்சிப்பிரிவு அனைத்து எறும்பு வளங்களுடனும் ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு பிரிவும் தத்தமது ஊழியரின் பதவி உயர்வினை கருத்திற் கொண்டு புதிது புதிதாக பதவிநிலைகளை உருவாக்கிக்கொண்டேயிருந்தன.
அரசியலும் தனது பங்கிற்கு நிறுவனத்தலைவர், பிரதித்தலைவர், வேலைப்பணிப்பாளர் உட்பட்ட பணிப்பாளர் சபையை தேவயானளவு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடன் ஏற்படுத்திக்கொண்டது.
அத்தோடு, அந்த அரசியல் அவைக்கு வேலைகளை கண்காணித்து அறிக்கைகள் பெற்றுக்கொள்ள உள்ளக கணக்காய்வுப்பிரிவும் இணைத்துக்கொள்ளப்படுகிறது.
அதுவும் தமக்கென பதவிநிலைகளை ஏற்படுத்திக்கொள்கின்றது.
அரசியலின் தலையீட்டின் விளைவாக, தொழிற் சங்கங்கள் தோற்றம் பெற்றன.
அதுவரையிலும் காலநேரம், இலாபநஷ்டம் பாராது சுறுசுறுப்புடன் ஊழிய மற்றும் அலுவலக எறும்புகள் கையெழுத்து போடுவதோடு தமது கடைமைகளை மட்டிறுத்திக்கொண்டன. வேலை செய்ய மேலதிக நேரக்கொடுப்பனவுகள் கோரப்பட்டன. பின்னர், அவையும் கூட உரிமை ஆகின.
அனத்து எறும்பு வளங்கள் இருந்தும் சேவைகள்/வேலைகளுக்காக கொந்துராத்துகள் வழங்கப்பட்டன. அரசியலும் அதிகாரியும் அதனை மேலதிக வருமானமானத்திற்கான வழியாக்க, ஈற்றில் அதுவே அவர்களின் பிரதான வருமான வழியுமாகியும் போனது.
எறும்புகளோ அலுவலகத்தில் அரசியல் உரசலில் பிசியாகிப்போனன.
Saturday, November 9, 2019
தொண்டன் தேம்பல்
கைகூப்பி வணங்கியோனே
கண்டுக்காம போகிறாயே
கதவடிக்கே வந்தவனே
கதவடைத்து விரசிறாயே
கனிவுடன் பேசினாயே
கௌரவனாக்கினோமே
இனிவரா தேர்தலென்றாே
இழிவுடன் விலகிப்போகிறாயே
உறவுகள் இழந்தேனே
உனை ஆதரித்ததனாலே
உதவிக்கு நாடினேனே
உதறினாயே ஆரேயிவனென்றே
உன்னெதிரி எனக்குமென்றேன்
எந்நட்பும் வேண்டாமென்றேன்
ஒன்றானீர் அரசமைக்க
என்னுறவோ இன்றுமில்லை.
தொழக்கூட விழித்ததில்லை
விழித்திருந்தேனுன் வெற்றிக்காக
தொழிலொன்று என்றபோது
தொகையெங்கே என்கிறாயே
நாட்டுக்காகவென்றே நின்றேன்
வீட்டுக்கே செய்யாததை செய்தேன்
நோட்டுக்காய் தின்றே நாட்டை
மீண்டும் வருவாய் வோட்டு கேட்டே
Wednesday, October 2, 2019
நாளும் நாலுவேளையும்
கனவு கலைகிறது
கருமை விலகிறது
காலையாகியது
வெயிலும் எறிகிறது
வியர்த்து வழிகிறது
பற்றி எரிகிறது
பகலும் ஆகியது
வானம் சிவக்கிறது
வனப்பாயிருக்கிறது
மனமும் மகிழ்கிறது
மாலையாகியது
நாளும் நகர்கிறது
நித்திரை அழைக்கிறது
இருளும் சூழ்கிறது
இரவு ஆகியது.
Thursday, September 26, 2019
பாபதேசம்

ஆள வந்த நாயகர்கள்
வீழ விட்டே படுகுழியில்
ஆட்சி செய்து அனுபவித்தார்
மீழா மடுவில் வீழ்ந்து விட்டோம்.
வேற்று மொழி ஆங்கிலமாம்
தூற்றி தள்ளி தூர வைத்தார்
பெற்ற பிள்ளை கள் மட்டும்
கற்று தேற வழி சமைத்தார்.
தீண்டா மொழி தமிழ் என
தள்ளி நின்று பேச வைத்தார்
பண்டாவின் பேரர் கூட
பற்றிக்கொண்டார் தமிழ் மகனை.
சிங்களமாம் சிறந்த மொழி
ஓங்கி ஒலித்தார் மேடை பேச்சு
இங்கிலாந்து சென்று நன்றாய்
இங்கிலீசும் கற்று தேர்ந்தார்
ஆனைக்காக அழுகின்ரார் தெரு
நாய்க்காக தேம்புகின்ரார்
ஆ அது பாவம் என்கின்றார்
அனைத்துயிரும் ஒன்றே என்றார்
மானுடம் போற்றும் போதி தர்மம்
மாசு செய்து போதித்தார் கர்மம்
வீணுக்கு வம்புகள் செய்தே
விதைத்தார் வேற்றுமைகள் பல.
சிங்கமென சீறுகிறார் உரு
சிறுத்த நாட்டினுள்ளே
அங்கமெல்லாம் மயிர் கூச
அடங்கினோம் உலக அரங்கில்.
இலவசமாய் எல்லாம் தந்து
இயங்காமல் செய்து விட்டார்
இல்லாமை சொல்லிக்காட்டும்
இழி நிலைக்குள் ஆளானோம்.
தேசப்பற்று பேசி பேசி
தேகம் எல்லாம் உணர்வு ஊட்டி
பாசம் கொண்ட தன் பிள்ளைதம்
பதிகின்றார் புலம் பெயர்த்து.
வீழ்ந்து கிடந்த வங்கம் கூட
வீராப்புடன் எழுந்து நிற்க
தாழ்ந்து தவித்து நிற்கிறோம்
தரணியிலே தரம் கெட்டு.
Wednesday, February 20, 2019
வீணர் சந்தி
எனது ஞாபகத்திற்கு அப்பாற்பட்ட காலத்தில் இருந்து அது ''வீணர் சந்தி''தான். பின்னேரம் தொடங்கி பின்னிரவு வரை இளைஞர் சிலர் சந்தியில் நின்று கொண்டிருப்பது அன்றிலிருந்து இன்று வரை தொடர் கதை. வேலையற்ற இளைஞர் தேவைற்ற விதத்தில் நேரத்ததை வீணடிப்பதாலாே என்னமோ "வீணர் சந்தி" எனற பெயர் நிலைத்துப்போனது.
என்ன தான் வீணர் சந்தி என பெயர் பெற்றாலும் இளைஞர்கள் சந்தியில் கூடுவதினை பெற்றோரும் பெரியோரும் கண்டிப்பதோ கண்டுகொள்வதோ இல்லை. மாறாக அவர்களும் சிலவேளைகளில் அந்த சிறிசுகளுடன் சிறிது நேரம் அளவளாவிச்செல்வதுவும் உண்டு. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. அந்த பெரியோரும் ஒரு காலத்தில் வீணர்களாய் சந்தியில் பந்தியமைத்தவர்கள்தாம் என்பதுடன் அந்த இளைஞர்கள் பெற்றோரின் பார்வை வீச்சினுள் வயதிற்கே உண்டான சில சில்மிசங்களுடன் இளைமையை அனுபவிக்கிரார்கள் என்பதுவு ம் ஆகும். மேலும் அந்த இளைஞர்களால் ஏனையவர்களுக்கு குறிப்பாக சந்தியைக்கடக்கும் பெண் பிள்ளைகளுக்கு பயப்படுமளவிற்கு பிரச்சினைகள் ஏற்படுவதுவுமில்லை. இந்த இடத்தில் சண்டைகளோ சச்சரவுகளே காண்பது அரிது. யாவும் ஹாஷ்யம் எப்போதும் சுவாரசியம்.
என்னதான் வீணர் சந்தி என பெயர் பெற்றிருந்தாலும் இது பிரதேச சிறிசுகளின் மிக முக்கிய மூலஸ்தானமாக அமைந்திருந்து என்றால் அது மிகையாகாது. வீதி கிரிக்கட்டின் முக்கிய தளமும், தாளவட்டுவான் சந்தியைத்தொடும் பாட்டத்தையுடைய கிட்டிப்புள்ளு விளையாட்டின் குழியடியும் இதுவாகும். பெருநாள் காலங்களில் சலாம் பள்ளியுடன் சேர்ந்த சிறுவர் சந்தையும் இச்சந்தியாகும். பெத்தாட வளவும் ஓதப்பள்ளியும் பள்ளி வாசலும் இச்சந்தியின் பந்திகளுக்கு ஊக்க காரணிகள்.
NYC மற்றும் Baravor Sports Club என்பன உருப்பெற்றதுவும் இந்த இடத்தில்தான். நற்பிட்டிமுனையின் முதல் கடின பந்த கிரிக்கட்டிற்கும் எண்ண வித்து விதைக்கப்பட்டதுவும் இவ்விடத்தில் தான்.
குறிப்பிட்டே ஆக வேண்டும், இந்த சந்தியில் பந்தியமைத்தோர் கெட்டு குட்டிச்சுவரானதாகவும் சீரழிந்ததாகவும் சரித்திரம் மிக மிக குறைவு. மாறாக பல டாடக்டர்கள், பொறியியலாளர்கள், நிருவாக சேவை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், கிராம சேவகர்கள், கவிஞர்கள் என பல் துறைகளிலும் மிளருகின்ற விற்பன்னர்கள் உருவாகிய இடம். மேலும் பாதுகாப்புத்துறையில் உயிர்த்தியாகிகள் பலரும் இங்கு உருப்பெற்றிருக்கின்றனர் என்பதினையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
இறுதியாக, "வீணர் சந்தி" என்பதற்கு பதிலாக ''Winner சந்தி" என்ற பெயர் பொருத்தமானதாக இருக்கும் என்றிருந்தாலும் நிதை்து விட்ட அந்தப்பெயரே சிறப்பானதாகும்.
Monday, November 12, 2018
மழை நீர் சேகரிப்பு
சில நிமிடங்களுக்கு பெய்யும் மழையினால் கூட வெள்ளம் தோன்றுகின்ற நிலையில், சில நாள் வெயில் கூட வரட்சிக்கு இட்டுச்செல்வதினை அவதானிக்க முடிகிறது. பூமி தாகத்தினால் தவிக்கின்ற அதே வேளை பொழிகின்ற மழை நீரோ வேண்டத்தகாததாக கருதப்பட்டு இயன்ற அளவு விரைவாக வழிந்தோடச்செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை வேடிக்கையானது.
முன்பெல்லாம் பூமியை நோக்கி வீழ்ந்த மழைத்துளி, சூழ்ந்திருந்த மரங்களாலும் புற்களாலும் வேகம் குறைக்கப்பட்டு பூமியை மெதுவாக தொடச்செய்யப்படும் போது, அது பூமியை ஊடறுத்து உட்புக போதிய அவகாசம் இருந்தது. பெய்த மழையின் குறிப்பிடத்தக்க அளவானது நிலத்தடியில் சேமிக்கப்பட, நீண்ட வெயிலைக்கூட சமாளித்து கொள்ளும் சக்தியினை பூமி பெற்றிருந்தது.
மரங்களினதும், புற்றரைகளினதும் இடங்களை கட்டடங்களும் சீமந்து தரைகளும் ஆக்கிரமித்துக்கொள்ள, வானத்திலிருந்து வேகமாக வீழும் மழைத்துளி எவ்வித தடங்கல்களுமின்றி தரையை தாக்கி தெரிகின்ற பள்ளத்தினை நோக்கி விரைவதன் விளைவு, சிறு மழைக்கும் வெள்ளம், குறுகிய வெயிலிற்கும் வரட்சி.
இயற்கை அமைத்துத்தந்த சமநிலையை குழப்பி விட்டு, கையைக்குழைந்து நிற்கிறது மானுடம். இனி என்ன செய்வது? நினைத்த மாத்திரத்தில் மழையை வா! என்றவுடன் வருவதற்கும், போ! என்றவுடன் போய்விடுவதற்கும் மழை என்ன எமது செல்லப்பிராணியா? அல்லது, கட்டிய கட்டடங்களை உடைத்து மழை நீருக்கு பூமியை ஊடறுக்க வழி சமைத்துக்கொடுப்பதா? நிலைமைக்கேற்றவாறு எம்மை மாற்றிக்கொள்ளாத வரையில் பிரச்சினை பிரச்சினைதான்.
இந்த சந்தர்ப்பத்தில் இயற்கை எமக்கொரு பாடம் சொல்லித்தருகிறது, மழை பொழியும் போது சேமித்து வைத்து, இல்லாத போது பாவித்துக்கொள்வது பற்றி. வெள்ளமாக வந்து அச்சுறுத்தும் மழை நீரை உரிய முறையில் சேமித்து, வரட்சியின் தாகத்திற்கு தீனியாக்க வேண்டியதுதான். மழையாலும் மழையின்மையாலும் நாம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவு தீர்வாக இது அமையும். நிலைமையின் விபரீதத்தினை புரிந்து கொண்டு செயல்படத்தவறும் பட்சத்தில் நிலைமை மென்மேலும் சிக்கலடையலாம். எதிர்காலச்சந்ததிகளுக்காகவே உருகி உருகி உழைத்து சொத்து சேர்க்கும் நாம், அச்சந்ததிக்கான வாழும் சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதினையும் உணர வேண்டும்.
மழை நீர் சேமித்தல் எனும் போது இரண்டு அடிப்படைகளை கவனத்திற் கொள்ள வேண்டும்.
1. நிலத்தின் மேல் வழிந்தோடி பிரச்சினையாக உருவெடுக்கும் நீரை நிலத்தினுள் புகச்செய்து சேமிப்பதன் மூலம், நிலத்தினை வளப்படுத்தொக்கொள்ளல்.
2. பொருத்தமான முறையில் மழை நீரை சேகரித்து வைத்து தேவையான போது பாவித்துக்கொள்ளல்.
பொதுவாக சேகரிப்பை தாண்டி வரும் மேலதிக நீரை நிலத்தடியினுள் உட்புகச்செய்யும் உக்தி பயனுள்ளதாக அமையும்.
முதலாவது வழியினடிப்படையில், இடத்திற்கேற்றவாறு முறைகள் தெரிவு செய்யப்படலாம். உதாரணத்திற்கு சில முறைகளை சுட்டிக்கட்டலாம்.
அ) சிறியளவிலான குட்டைகளை ஏற்படுத்துவதன் மூலம் நீர் தேங்கச்செய்யப்பட்டு நிலத்தினுள் உட்புக வழி சமைக்கப்படலாம். மேலும் குட்டையிலிரிந்து நேரடியாகவும் தேவைக்கேற்றவாறு பெறப்படலாம். இது நகரச்சூழலுக்கு சில வேளை பொருத்தமற்றதாக அமையலாம்.
ஆ) மீழ் நிரப்பு குழிகள்/ துளைகள் ஏற்படுத்தப்படுதல். பொருத்தமான இடங்களில் குழிகளை ஏற்படுத்தி மேலதிகமாக வழிந்தோடும் மழை நீரை அவற்றை நோக்கி திருப்பி விடுவதன் மூலம் நிலத்தடி நீரை வளப்படுத்திகொள்ள முடியும்.
இ) கிணறுகள் போன்ற ஏற்கனவே இருக்கும் குழிகளை நோக்கி மழை நீரை திருப்பிவிடுதல். உதாரணமாக, கூரை நீரை கிணறுகளை நோக்கி திருப்பி விடுதல் மிக இலகுவான முறையாகும். இது கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் ஒரு முறையாகும். இவ்வாறு செய்யப்படும் பிரதேசங்களிலுள்ள கிணறுகள் வரட்சிக்காலங்களில் தாக்குப்பிடிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஈ) சிறியளவிலான அணைகளை ஏற்படுத்தி வழிந்தோடும் நீரின் வேகத்தினை கட்டுப்படுத்துவதன் மூலம் நிலத்தினுள் உட்புகுவதற்கிரிய அவகாசத்தினை ஏற்படுத்திக்கொடுத்தல்.
இது போன்ற இன்னோரன்ன முறைகளை குறிப்பிடலாம். இடத்திற்கும் காலநிலைகும் ஏற்றாற் போல பொருத்தமான முறைகளைக்கண்டறிந்து நிலத்தின் தாகத்தினை தீர்த்துக்கொள்ளலாம்.
இரண்டாவது அடிப்படையின் படி, மழை பெய்கின்றபோது சேமித்து பின்னர் பாவனைக்குட்படுத்துதல். நகர்ப்புறங்களில் வீழும் கூரை நீரின் அளவானது, அந்நகரங்களின் வருடாந்த நீர்த்தேவையினை விடவும் அதிகமானது என கண்டறியப்பட்டுள்ளது. இதனை வேறுவடிவில் சொல்வோமானால் நகர்ப்புறங்களில் கூரை நீரை உரியமுறையில் சேமித்து பாவனைக்குட்படுத்துவோமானால், அங்கு நீர் வழங்கள் திட்டங்களின் தேவை இருக்காது. இதன் மூலம் பெருமளவிலான சக்தியும் பமமும் சேமிக்கக்கூடியதாக இருக்கும் என்பதோடு, நகர்ப்புறங்களில் சிறுமழைக்கும் ஏற்படும் சிறு வெள்ளங்களுக்கும் தீர்வாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த இடத்தில் நம் கண் முன்னே தோன்றும் முதற் கேள்வி, இந்த நீரானது குடிப்பதற்கு உகந்ததா என்பதே. உண்மையில் சொல்லப்போனால், மழை நீரானது உரிய முறையில் சேமிக்கப்படுமானால், இதைனை விட குடிப்பதற்கு உகந்த நீர் இல்லை என்றே சொல்லலாம். அதே போன்று சலவைக்கும் மிக உகந்த நீராக மழை நீரே காணப்படுகின்றது. இது பற்றி பின்னர் மழை நீர் சேமிப்பின் பயன்கள் என்ற தலைபில் பார்க்கலாம்.
சூழ் நிலைகேற்றவாறு பல்வேறு வழிகளில் மழை நீரை சேமித்துக்கொள்ளலாம். இடவசதியுள்ள வீடுகளில் கூரையின் அளவு மழை வீழ்ச்சியின் அளவு மற்றும் பரம்பல் போன்றவற்றின் அடிப்படையில் உரிய அளவிலான தாங்கிளை அமைத்துக்கொள்ளலாம். உரிய பொறிமுறைகள் மூலம் கூரைகளின் தங்கியிருக்கும் அசுத்தங்கள் கழுவிச்செல்ல விட்டு நீரை சேமித்துகொள்ளலாம்.
நகர அபிவிருத்தி சட்டத்திற்கமைய கட்டடங்கள் அமைக்கப்படும் போது மழை நீர் சேமிக்கும் பொறிமுறையொன்றை அமைத்துக்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டமானது சரியாக அமுல் படுத்தப்படுமானால் கொழும்பு உட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மழையின் போதும், மழையின்மையாலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு குறிப்பிட்டளவு தீர்வு கிடைக்கும். (2009.04.17 இல. 1597/8 வர்த்தமானியைப்பார்க்க.)
http://negombolawsociety.com/1597_8%20(E).pdf
முன்பு சுட்டிக்காட்டியதைப்போல மழை நீரானது மற்றய நீருடன் ஒப்பிடும் போது பல் வகையான அனு கூலங்களை கொண்டுள்ளது;
1. மென் தன்னையுடையதாக இருப்பதால், துணி துவைக்கும் போது குறைந்த அளவிலான சவர்க்காரமே தேவைப்படுதல். மேலும் பாத்திரங்கள் சுத்தப்படுத்தும் போது அவற்றிற்கு ஏற்படும் தீங்கு குறைவானது. பாத்திரங்களில் நீரினால் ஏற்படும் படிவுகள் இல்லை.
2. சக்தியும் பணமும் சேமிக்கப்படுதல்.
3. நீர்த்தேவைக்காக சுயமான தீர்வு ஆகையால் தங்கியிருக்க வேண்டியதில்லை. குறிப்பாக சிதறி வாழும் கிராமச்சுழலுக்கு மிகவும் உசிதமானது.
4. கன மழையின் போதான மண்ணரிப்பு வெள்ளம் போன்றவற்றின் பாதிப்புகளை குறைத்துக்கொள்ளலாம்.
5. சுத்திகரிக்கப்பட்ட நீரில் அடயாளப்படுத்த முடியாத தீங்கிழைக்கக்கூடிய இரசாயனப்பதார்த்தங்கள் காணப்படலாம்.
6. ஏனைய நீர் வகைகளுடன் ஒப்பிடும் போது மழை நிரானது தாவர வளர்ச்சிக்கு மிகவும் உசிதமானதாக காணப்படுகிறது. மழை காலங்களில் தாவரங்கள் அதீத வளர்ச்சியை காட்டுவதினை நாம் அவதானிக்கலாம். மழை இல்லாத காலத்தில் வீட்டுத்தோட்டம் மழை நீரை சுவைக்க செய்து ஆரோக்கிய வளர்ச்சிக்கு வழி சமைக்கலாம்.
7. கிட்னி பிரச்சினை உள்ள பிரதேசங்களில், சேமிக்கப்படும் மழை நீரில் அளவு வரட்சிக்காலத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய போதுமாகாத விடத்து, கிணறுகளில் கிடைக்கும் கன நீருடன் சேமிக்கப்பட்ட மழை நீரை கலந்து நீரின் கனத்தன்மையை ஐதாக்கி பாவனைக்குட்படுத்த முடியும்.
Refer for more:
https://morningchores.com/rainwater-harvesting/
Thursday, June 7, 2018
சாது மிரண்டால்................??
வித்ரு தொடங்கிவிட்டது என்பதை ஹவ்ழில் வரும் பேரிரச்சலில் தெரிந்து கொள்ளலாம். இவர்கள் எங்கிருந்து எவ்வாறு இந்த சில மணித்துணிகளுக்குள் வந்தார்கள் என சிந்தித்து அறிவது கடினமானது. அந்த இளசுகளின் டைமிங்கும் (Timing) ஐமிங்கும் (Aiming) அவ்வளவு துல்லியமாகவிருக்கும். பள்ளியின் பண்புகள் தெரியாதவர்களின் நோன்புகால பிரசன்னத்தினால் ஹவ்ழில் கழுவப்படும் கஞ்சிக்கோப்பைகளின் மூலம் ஹவ்ழு வாழ் மீன்களுக்கு, நோன்புகாலத்தில் அளவிற்கு மிஞ்சிய உணவு கிடைத்திருந்தாலும், வித்ரு தொடங்கும் அந்தக்கணம் என்னவோ மரண பயத்தினை கொடுத்திருக்க வேண்டும். சலாரென தொடங்கும் அந்த சலசலப்பு குறுகிய காலமாயினும் ஒரு பேரிரைச்சல். பெரும்பாண்மையானவர்கள் ஒழூச்செய்வதிற்குப்பதிலாக அவசரத்தில் முகத்தையும் காலையும் கழுவிக்கொண்டு சஃபிலே சேர்ந்து கொள்வர். அதுவரைக்கும் இரண்டு மூன்றாக இருந்த சஃபு, சில வினாடிகளுக்குள் பள்ளியின் முக்கால்வாசியை பிடித்திருக்கும்.
இருந்தாலும், இந்த வகைக்குள் அகப்படாத ஒருசில இளசுகளும் இருக்கத்தான் செய்தார்கள். ரம்ஸீன், முஜீப் உட்பட நானும் அந்த விதிவிலக்குகளில் அடங்கும். பெரியவர்கள் மத்தியில் எங்கள் குறித்து ஒரு வகை நல்லெண்ணம் இருந்தது. நாமும் அதைக்காப்பாற்றும் வகையில் மிகவும் கவனமாக நடந்து கொண்டோம்.
நாரிசா பகிரும் வேளை காட்சியின் உச்சக்கட்டம், வித்ரு வேளை விரைந்தோடி வந்தவர்களின் விளைச்சல் கிடைக்கும் வேளை. எப்படியென்றாலும் வயதொத்தவர்களாயிற்றே, நாரிசாவிற்காக வீற்றிருக்கும் வேளை அவர்களை நோக்கி எமது இருப்பிடத்தை நகர்த்த முனையும் போதெல்லாம், எம்மீது நல்லெண்ணம் கொண்ட பெரியவர்களின் அக்கறை எம்மை அந்தக்கூட்டத்திலிருந்து வேறாக்கி பெரியவர்களுடன் இருக்க வலியுறுத்தும். எமக்கான கவனிப்பு பெரியவர்களுக்கொத்ததாகவிருக்கும். நாமும் அந்த கௌரவத்தினை விட்டுக்கொடுக்க விரும்புவதுமில்லை.
என்னதான் இருந்தாலும் விதியின் விளையாட்டு எம்மை சீண்டிக்கொண்டுதான் இருந்தது. நாரிசா பகிர்ந்தளிக்கும் பொறுப்பு தொழில் ரீதியாக மோதினாரையே (மு அத்தின்) சாரும். அவரின் அந்த அதிகாரைத்தினை அவரின் மகனும் நண்பர்களும் கையிலெடுத்திருந்தனர். அவர்கள் இயன்றளவு நாரிசாவை மீதப்படுத்தி அதனை கையகப்படுத்துவதிலேயே குறியாகவிருந்தனர். விளைவு பெரியவர்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்ற எம்மீதும் அவர்களது கப்பாது செயற்பாடு விழத்தொடங்கியிருந்தது. நாம் கட்டிக்காத்த மரியாதைக்கும் வேட்டு வைக்கத்தொடங்கியிருந்தனர். அங்குதான் சாது மிரளத்தொடங்குறான்.....!
இந்த நிலைமை குறித்து எமது உச்ச பீடம் கலந்து ஆலோசித்தது. உச்ச பீடம் என்றால் ரம்ஸீனும் நானும்தான். இதற்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும் எனவும், அது நாம் சேர்த்து வைத்திருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும், எனவும் தீர்மானிக்கப்பட்டது.
திட்டம் தயாராகிறது. நாளும் குறிக்கப்படுகிறது. அவர்கள் வரும் பாதை நேரம் என்பன கண்காணிக்கப்படுகிறது. கமலா ஹாஜியாரின் ஒழுங்கை மதிரிசா வீதிக்கு வந்து சேரும் சந்தி தீர்மானிக்கப்படுகிறது. நாரிசா குறித்த முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் அந்த சலசலப்பிற்கு முன்னமே அவர்கள் வந்துவிடுவதுவும் அவதானிக்கப்பட்டது. இனி நாடக அரங்கேற்றம் தான் பாக்கி.
அந்த நாளின் தராவீஃவை தவிர்த்து குறித்த சந்தியில் இருளினை சாதகமாக்கி நிலையம் எடுத்திருந்தோம். மோதினாரின் மகனும் நண்பர்களிருவரும் அதோ வருகிறார்கள். திட்டத்தின்படி அவர்கள் எங்களைக்கடந்து செல்ல அனுமத்திக்கப்பட்டு இறுதியாக வந்தவர் வாய் பொத்தப்பட்டு கைகளும் கால்களும் இறுக்கப்பிடிக்கப்பட்டு தாக்கப்படுகிறார். நடப்பதை அறியாமல் மற்றய இருவரும் சிறு தூரம் வரை சென்றிருந்தனர். தம்மோடு கதைத்துக்கொண்டு வந்தவரின் சந்தத்தினை காணாமல் திரும்பிப்பார்த்த போதுதான் அவர்களுக்கு நடப்பதினை ஊகிக்க முடிந்தது. திடீரென சத்தமிடத்தொடங்கினர். "எங்களை கடத்துறாங்கள்.......". வீதிக்கு சனம் கூடுமுன்னர் நாமும் ஓடி மறைந்து கொண்டோம்.
எங்களுக்கு இருந்த கவலையெல்லாம் எங்களை அடையாளம் கண்டுகொண்டார்களா என்பதே. அவ்வாறிருந்திருந்தால் நாம் சேர்த்து வைத்திருந்த நற்பெயர் நாசமாயிருக்கும். நல்ல வேளை அது நடக்கவில்லை. நமக்கிருந்த நற்பெயர், எங்களை சந்தேகத்திற்குரியவயவர்கள் பட்டியயிலும் சேர்க்காமல் பாதுகாத்திருந்தது.
Wednesday, April 4, 2018
சட்டி TO அடுப்பு
மக்கள் நினைப்பதுண்டு பாவம் தலைவனென்று!
தலைவன் நினைப்பதுண்டு ஆட்சி நிலைக்குமென்று
தலைவன் நினைப்பதுண்டு ஆட்சி நிலைக்குமென்று!
மக்கள் நினைப்பதுண்டு பாவம் தலைவனென்று
மக்கள் நினைப்பதுண்டு பாவம் தலைவனென்று!
ரவியும் களவு செய்தார் ரணிலும் இடம் கொடுத்தார்
ரவியும் களவு செய்தார் ரணிலும் இடம் கொடுத்தார்!
வோட்டு கொடுத்துவிட்டோம் வேட்டு வாங்கிவிட்டோம்!
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது!
தலைவன் நினைப்பதுண்டு ஆட்சி நிலைக்குமென்று
வோட்டு சிதறிவிட்டால் ஆட்சி கலைந்து விடும்
வோட்டு சிதறிவிட்டால் ஆட்சி கலைந்து விடும்
கூட்டு முடிந்துவிட்டால் மஹிந்த கருமம் திரும்பிவிடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்
தலைவன் நினைப்பதுண்டு ஆட்சி நிலைக்குமென்று
விதியின் விலங்குகளில் நாம் விழுந்து மாழுகிறோம்
மதியால் முடியவில்லை சிறு பாண்மை கலங்குதடா
தெரிவு தெளிவுமில்லை நம் குழப்பம் கூடுதடா
தடுக்க முடியவில்லை தந்திரம் தவறுதடா
தலைவன் நினைப்பதுண்டு ஆட்சி நிலைக்குமென்று
மக்கள் நினைப்பதுண்டு பாவம் தலைவனென்று!
Friday, March 23, 2018
வேண்டாமே அரசுயல்
தூற்றி தூசிப்பதுவும் - தனைத்தான்
போற்றிப்புகழுவதுவும்
தேற்றுதலேதும் தரா.
பறைசாற்றவும் நேரமல்ல
கறைமறந்து விரையுக
அக்கறையுடன்.
உளருவது யார்
உறங்குவது யார் - என
உரசியறியவல்ல,
அவசர தேவை
அரிசி குற்றியாக வேண்டும்.
வீழும் வேளையில்
வோட்டுகளுக்காக ஏந்தி
வாழும் கோழைகள்.
அரசுயல் செய்வது கருமம்.
Wednesday, December 20, 2017
ஆட்டி அடங்கும் தேர்தலடா

ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
முடிந்தால் கொழும்பிலே செட்டிலடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா
பிரிந்தோம் உறவினை உண்மையடா
பேசினோம் வன்சொல்லை நட்பிற்கடா
மறவோம் என்பதே நித்தியமடா
மறந்தான் நம்மளை தலைவனடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா
சிரித்தே உண்மையை மறைக்கின்றான்
தீமைகள் செய்தே பிழைக்கின்றான்
இருப்பார் என்றே நினைப்பவர் கனவுகளில்
மறந்தே கண்களில் தூவுகின்றார்
ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா
சொல்லுவார் அதுபோல் சிறப்பில்லை
சொன்னதை செய்தார் யாருமில்லை
எண்ணுவார் வாக்கினை முடிந்ததுமே
எண்ணிடார் எம்மினை கனவிலுமே
ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா
சிரிப்பவன் கபடத்தை மறைக்கின்றான்
தீமைகள் செய்தே பிழைக்கின்றான்
இருப்பார் என்றே நினைப்பவர் கனவுகளில்
மறந்தே கண்களில் தூவுகின்றார்
ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா
வோட்டுக்கேட்டுப்பார்
களிசறைகள் வட்டம் போடும்
உன்னில்தோன்றும்
சுவர்கள் சேதமாகும்
கும்பிடு போடுவாய்
துஷ்டனும் நண்பனாவான்
நண்பனும் யாரோ ஆவான்
ஒதுங்கி நிற்பர்
உன்னோடாய் உணர்வாய்
நாதியில்லா
கூட்டாமொன்று
சூழக்காண்பாய்
இந்த உற்றார் இந்த உறவினர்
எல்லாம் தேர்தலில் வாக்களிக்கும்
எந்திரங்கள் என்பாய்
இடமாறி ஆதரிக்கும்
உன்குரல்
ஒலிபரப்பாகும்
நக்குவாரத்தில் அலையும்
கையேந்தல் கலைக்கும்
வற்றிய குளமாய்
வாக்குகள் மட்டும்
வேண்டி அலையும்
சரமாரியாகும்
உடைந்து போக
உன்னால் முடியுமா?
அடைந்ததுண்டா?
அறிந்ததுண்டா?
புகழத் தெரியுமா?
தனிமையை சபையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?
சிலிர்க்க முடியுமே
சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே
வாழவும் முடியுமே

Wednesday, November 29, 2017
தடமாற்றம்
முள்ளை முள்ளால் எடுக்கலாம் -குத்திய
முள்ளாலிலுமா?
கிள்ளியவனிடமே தொட்டிலாட்டலா?
கள்வனிடம் காவல் பொறுப்பா?
பிரிக்கவா கேட்கிறீர்கள்?
பிரித்துத்தராது
புரிந்து கொள்ளுங்கள்!
நரியிடம் வேண்டாம் குடைவாசம்!
தடமாற்றிடலாகாது!
வாழ்வியல் கோலம்
மற்றவர் பெற்றார்
பெற்றவர் இழந்தார்
பெத்ததும் பெற்றார்
மற்றவர் பெற்றிட
பெற்றாராய் இழந்தார்
தொற்றிய தொற்றாய்
தொடர்ந்திடும் விதியிது
முற்றுப்பெறாத முடிவிலி உலக
முற்றுநாள் பெற்றிடும் வரையிலும்!
Thursday, August 17, 2017
தோஷதேசம்
கிழிக்க நினைத்ததோ தென்கிழக்கை
கிழிந்து போனதோ கீலம் கீலம்!
அத்துறைக்கப்பலொரு அரக்கனினாட்சி
சதுறயிலுமொரு சிற்றரசாட்சி
கல்துறையிலோ பாவம் தூங்குமாட்சி!
முகவெற்றிலையென முழங்கியவூரின்
அகத்தினிலிலோ பிளவுகளாயிரம்!
துருவத்திசைகளின் மருதூரார்கள்,
பிரிவினை வேண்டி பிரயத்தனிக்கிரார்கள்!
வோட்டுக்காய் செய்யும் வெளிவேசம்
வேண்டாமே இந்த வேற்றுமை கோஷம்!
Tuesday, July 11, 2017
Quo Vadis Sri Lanka Cricket?
கடித்துக்குதறுதுகா!
கறுப்புக்கானானுகளும்
கோலிக்கூட்டமும்
கொத்தி விரட்டுதுகா!
வங்காளப்புலிகளும்
சிங்கத்துக்கு மேலயாங்கா!
வெல்லாத இன்டீஸும்
வெண்டிட்டு போகுதுகா!
சவுத்து ஆபிரிக்காவும்
சவுத்த ஆபிக்காவும்
சாத்திட்டுபோகுதுகா!
ஆப்பு வெக்கிறத்துக்கு
ஆப்புகானித்தானும் காத்துக்கிடக்குதாங்கா!
போலபோடச்சொன்னா
நூலக்கட்டிறங்கா!
பல்லுமாளிகையில மாநாயக்காக்களிடம்
மல்லுக்கட்டிறங்கா!
சிங்கக்கூட்டமிங்கு
அசிங்கமா சிணுங்குதுகா!
http://www.espncricinfo.com/sri-lanka-v-zimbabwe-2017/engine/match/1104482.html
Tuesday, May 9, 2017
பொம்மலாட்டம்
ஆட்டுவிக்கிறார்கள், அசிங்கம்.
புட்டுவத்தில் மோகம்,
பொம்மைகளாய் நீங்கள் மதியிழந்து
பட்டுமாய்கிரீர்கள் பாவம்.
கீழாய் நீங்கள் தொங்கம்,
பாழாய் போனது பாவம்
மேலாய் நின்ற மதிப்பு.
முடிக்கப்படும் முடிவுகள்,
தேடிய கௌரவம்
தெருவோடு போகுது.
மமதைகளாய் கீழ்பட்டுப்போனீர்,
மரியாதைக்குரியவர் நீங்கள்
மானமிழந்து குனிகிரீர்கள்.
வழிபடும் மக்களிருக்க,
பிழிந்தெடுக்கும் பிரயத்தனம்
இழியசெயல் ஆகியதுவே.
Monday, March 27, 2017
வரலாற்றில் ஒரு பாடம்
அன்று 1990 இன் ஜூன் அல்லது ஜூலை மாதம், அப்போதைக்கு பழகிப்போன விமான குண்டு வீச்சு, 21 செக்கன்களில் தொடங்கி முடியும் ஆட்டிலறியின் இரட்டை சத்தம் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளின் சத்தம் போன்று அல்லாமல் முன்பு கேட்டிராத ஒருவித புது வெடிச்சத்தங்கள் அதிகாலையிலிருந்தே கேட்கத்தொடங்கிருந்தன. "இரவுகளில் நடந்தேறிய சம்பவங்களின் அப்டேட்களை சுபஹு தொழுகையின் பின் அறிந்து கொள்ளாக்கூடியதாயிருக்கும்" என்ற வழமையினடிப்படையில், கடலிலிருந்து நேவி தாக்கத்தொடங்கியிருந்ததாக அறிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது.
சில நாட்களுக்கு முன்புவரை ஹெலிக்கொப்டர்களே வான் தாக்குதல்களை நிகழ்த்திக்கொண்டிருந்தாலும், ஒரு நாள் பட்டப்பகலிலேயே அப்பழுக்காக தெரியக்கூடியதாகவிருந்த, கீழிருந்து சீறிப்பாய்ந்த நெருப்புப்பந்துகளின் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக திடீரென உயர உயர எழுந்த ஹெலி, மீண்டும் வரவேயில்லை. அதன் பிற்பாடு கரத்தை வடிவிலான சிறிய ரக விமானங்களும் சாதாரண விமாங்களின் வடிவையொத்த ஓரளவு பெரிய விமானங்களுமே வான் தாகுதல்களை நடாத்திக்கொண்டிருந்தன.
அன்று பொழுது புலரத்தொடங்கியிருந்தது, வழமைக்கு மாறான நேவியின் சத்தங்களுடன் வான் கரத்தைகளின் நடமாட்டங்களும் அதிகரித்திருந்தது. சாதாரணமாக குண்டுகளையே வீசும் வான் கரத்தைகள் இன்று நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு என புகைகளை வீசிக்கொண்டிருந்தன. நாடகம் உச்சக்கட்டத்தை அடைந்து முடிந்திருந்தது. சில நாட்களாய் ஒலித்த சத்தங்களெல்லாம் இந்த வழமைக்கு மாறான சம்பவங்களுடன் அமைதியாகிவிருந்தன.
இந்திய அமைதி காக்கும் படை திருப்பி அனுப்பப்பட்டிருந்த காலமது. பிரேமதாச அரசுடன் புலிகள் பேச்சுக்களில் ஈடிபட்டுக்கொண்டிருந்தனர். அன்று 1990.06.11; கல்முனை உவெஸ்லி கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டியின் இரண்டாவது நிகழ்விற்காக முஸ்தபா சேர் ஒன் யுவர் மார்க், கெட் செட், ரெடி என தயாராக நிற்க, எல்லோரும் அந்த "டப்" சத்தத்தினை எதிர்பார்த்திருக்க, அதற்கு பதிலாக பட பட வென வேறு தொடர் வெடிசத்தம் தொடங்கியது. ஆம் கல்முனை நகருக்கு பொருட்கள் வாங்க வந்திருந்த இராணுவ வாகனம் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் யுத்தம் மீண்டும் தொடங்கப்படுகிறது. தொடர்ந்து பல பொலீஸ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டுகின்றன, விடுவிக்கப்படுவார்கள் என்ற கருணாவின் வாக்குறுதியுடன் பிரேமதாச பொலீஸ் நிலையங்களை சரணடைய உத்தரவிடுகிறார். நிலமை தலைகீழ் ஆகிறது. சம்மாந்துறை தவிர ஏனைய பொலீஸ் நிலையங்களைச்சேர்ந்த சரணடைந்த அறுநூற்றுகுமேற்பட்ட பொலீசார் வரிசையில் நிறுத்தப்பட்டு கொல்லப்பட்ட அந்த வீர(?) வரலாற்று சம்பவம் நடந்தேறுகிறது.( https://en.wikipedia.org/wiki/1990_massacre_of_Sri_Lankan_Police_officers )
இதே வீரர்கள்(?) தான் இந்திய படையுடன் ஒட்டியிருந்த இவர்களின் போட்டி வீரர்களால்(?) சுமார் ஒருவருடத்திற்கு முன் இதே போன்று காரைதீவு பொலீஸார் கொல்லப்பட்ட போது கொக்கரித்தவர்கள் என்பதினையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். இதனைத்தொடர்ந்து அம்பாரை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகள் யாவும் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், கல்முனையின் வாடிவீட்டுத்தொகுதியில் கடற்கரையோடு அமைந்திருந்த இராணுவ முகமானது புலிகளால் வீழ்த்தப்படமுடியாமலேயே இருந்தது. இத்தனைக்கும், பொசோன் விடுமுறைக்காக பெருமளவிலான இராணூவத்தினர் வீடுகளுக்குச்சென்றிருந்த நிலையில் சுமார் இருபத்தைந்திற்கும் குறைவானோரே முகாமுக்குள் இருந்திருந்திருந்தனர். ஆட்டிலறி மற்றும் வான் தாக்குதல்களின் உதவியுடன் சுமார் இருவாரங்களுக்கு மேலாக எதுவித சேதங்களுமின்றி தாக்குப்பிடித்துக்கொண்டிருந்தனர். எதுவித விநியோக மார்க்கங்களையோ நிரந்தர முகாங்களையோ கொண்டிராத கல்முனை பிரதேசத்தில் நிலைத்து நின்று பாரிய தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது என்பதினை புலிகள் நிரூபித்திருந்தனர். இவ்வறான சூழ்நிலையில் பொலீஸ் நிலையங்களை சரணடையச்செய்ததானது இன்றும் விமர்சனத்திற்குரியதாவே பார்க்கப்படுகின்றது.
பறக்கத்துடிக்கும் கூட்டுப்புழுவைப்போல சிறுவன் என்ற சிறைக்குள் இருந்து சிறிது சிறிதாக விடுபட்டு சிறகடிக்க முனைந்து கொண்டிருந்தகாலம். காய்ச்சலுக்கு ஒற்றை பெனடோலையே கொடுத்தமைக்கு எனது தந்தை டாக்கரிடம் திட்டு வாங்கிய போது, நான் வளர்ந்து விட்டதாக பெருமை பட்டுக்கொண்ட வயசு. சும்மாயிருக்க விடுமா தகவலறியும் தாகம்? நண்பர்களோடு தமிழ்வட்டையின் எல்லையை நோக்கி கால்கள் நகர்ந்தன. தமிழ்பெரியவர் இருவரின் சம்பாஷணை எமது தகவலறியும் தாகத்திற்கு தீனியானது.
"ஆமிக்காரன் கடலுக்குள்ளால ஓடிப்போயிட்டானாம்."
கோழகள் கீழைகள் என பலவாறான நக்கலான விமர்சனங்கள் வேறு. தமிழீழம் கிடைத்துவிட்டதைப்போன்ற பூரிப்பு அவர்களின் முகங்களில் அப்பட்டாய் தெரிந்தது. "பெடியன்கள் விடான்கள்" இதை நேரடியாக ஒருவர் கூறுவதினை அனுபவித்த சந்தர்ப்பம்.
இத்தனைக்கும் இந்த சமபவத்தினை தொடர்ந்து நடைபெறப்போகும் விளைவுகளைப்பற்றி ஊகிக்கத்தெரியாத அப்பாவிகளாக அந்த பெரியவர்கள் காணப்பட்டனர்.
இச்சம்பவம் நிகழ்ந்து சில நாட்களுக்குள்ளேயே அந்த அறுநூறு பொலீசாரின் அசிங்க படுகொலை குறித்து வெறியூட்டப்பட்ட நிலையில் இராணுவம் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்த பகுதிகளை நோக்கி எந்த வித பாரிய தாக்குதல்களுமின்றி இலகுவாக முன்னேறியது. ஜே வீ பீ கலவரத்தின் போது தன் இனத்தவரையே ஈவிரக்கமின்றி கொலை செய்ய பழக்கப்பட்டிருந்த இராணுவத்தின் வெறித்தனங்கள் இரண்டாம் கறுப்பு ஜூலை ஒன்றை அரங்கேறியிருந்தன. அகதிகளான எஜமானர்களால் கைவிடப்பட்ட நாய்களுக்கு மனிதப்பிணங்கள் விருந்தாயின.
இச்சம்பவங்கள் டயஸ்போராவின் வளர்ச்சிக்கு மென்மேலும் உரமூட்டுவதாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. உலக நாடுகளின் காலூன்றியிருக்கும் டயஸ்போராக்கள் தங்களின் இருப்பிற்கு மெம்மேலும் மெருகூட்டுவதற்கு இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாதா என ஏங்குவதினை அணமைக்கால சம்பவங்கள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.
Tuesday, July 12, 2016
கிழக்கு விரியலும் கிழங்கு பொரியலும்
வெட்டுண்ட கிளையிலொன்று
ஒட்டுடைந்து விட்டுப்போயி
வெட்டுண்ட துண்டொன்றை
கண்டு கொண்டது!
வேதாளம் மரமேற முனையிது!
பச்சையின்னும் முளைக்குமிதுவென
பூச்சாண்டி காட்டி பூதாகாரம் செய்யிது!
கிழக்கு விரியல்களின் துரும்பு!
Tuesday, January 26, 2016
Thursday, November 12, 2015
ஆரோக்கிய வழி!
Thursday, September 17, 2015
அஷ்ரப் சதுக்கம்!

இவ்வாறான நிலையில் ஒரு வரலாற்று நிகழ்வினை மீட்டிப்பார்க்கிறேன்..,
அது 1993/94 காலப்பகுதி டீ.பீ.விஜேதுங்க அப்போதைய ஜனாதிபதி, அரசியல் காய் நகர்த்தல் நடவடிக்கையாக தள்ளிப்போயிருந்த கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பை செய்கிறார். உசுப்பேத்தல் தந்திரத்தில் உயர்ந்த நிலையிலுருந்த அஷ்ரப் அரசியல் எதிர்காலத்தை நன்றாக கணக்குப்பார்த்து சவாலொன்றை விடுகிறார்.
"அம்பாரையின் முஸ்லிம் பெரும்பாண்மை பிரதேச சபைகளில் ஒன்றையாவது தோற்றால் எனது பாராளூமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன்".
இதுதான் சவால். கணக்கின் தீர்வு; சவாலை வென்றாலும் வெற்றி, தோற்றாலும் வெற்றி.
உசுப்பப்பட்டது, முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள்(?) மட்டுமல்ல அன்றைய பிரதான எதிரியான ஐ. தே. க யினரும்தான். ஐ. தே. க வின்
உள்ளூர் பிரபலங்களுக்கு மேலதிகமாக ஏசிஎஸ் ஹமீத், அஸ்வர், எம் எச்
முஹம்மத் உட்பட அக்கட்சியின் முழு பலத்தோடு அதிகார பலமும் பிரயோகிக்கப்பட்டது.
இதேர்தலில் தமிழ் கட்சிகள், இயக்கத்தாரின் எதிர்ப்புகள் காரணமாக போட்டியிடுவதிலிருந்து விலகியிருந்தததனால், தமிழ்மக்கள் அஷ்ரபை பழி தீர்க்க ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த முனைந்தனர். இதனை சாதகமாக்கிய மன்சூர் உட்பட்ட ஐ தே க யினர் மதுவினை காட்டி தமிழ் மக்களை கவருவதில் கவனம் செலுத்த தொடங்கியிருந்தனர். நிலைமையின் பாரதூரத்தை விளங்யிய தக்பீர் மந்திர போராளிகளும் அதே உக்தியை பயன்படுத்த முனைந்தமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. (தக்பீரில் களப் போராளிகள் திளைத்திருந்த வேளை தலைமைப்போராளிகள் பலர் தண்ணியில் திளைத்திருந்தமை வேறு விடயம்).
அஷ்ரப் சூறாவளிப் பிரச்சாரத்தின் (அவ்வேளை அவ்வாறுதான் அழைக்கப்பட்டது) உச்சக்கட்டமாக ஹெலிக்கொப்டரில் ஊரூராக பறந்து கொண்டிருந்தார். அதன் ஒரு கட்டமாக எனது நற்பிட்டிமுனை கிராமத்திலும் ஹெலிகொப்டர் இறங்க ஏற்பாடாயிருந்தது. ஆலையடிச் சந்தியில் கூட்டம் ஏற்பாடாயிருக்க பக்கத்திலிருந்த சிறு வளவினை ஹெலிகொப்டர் அனுபவமில்லாத எம்தூர் போராளிகள்(?) இறங்குதளமாக ஆயத்தம் செய்திருந்தனர். அஷ்ரபோடு ஹெலிக்கொப்டரையும் பார்த்துவிடலாமென்ற ஆவலில் பலரும் காத்திருக்க, இறங்காமல் வட்டமிட்டுக்கொட்டிருந்த ஹெலி திடீரென அண்மித்து வந்து காணாமற் போனது. மீண்டும் தென்பட்ட ஹெலி தூரமாய் பறந்து மாயமாய் போனது. எல்லோருக்கும் ஏக்கம் கலந்த ஏமாற்றம் "அஷ்ரபுமில்லை", "ஹெலியுமில்லை". சோபையிழந்த கூட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. திடீரென ஆலையடி வடக்கு வீதிப்பக்கம் சலசலப்பு. ஆமாம் அஷ்ரப்??? அது அஷ்ரப் தான் வீதியில் நின்ற இருவரின் வழித்துணையோடு கூட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். ஏற்பாடாயிருந்த வளவு பொருத்தமில்லாதலால் சில நூறு மீட்டர்கள் உள்ளேயிருந்த மையித்துப்பிட்டியில் இறங்கி மதிலேறி
தன்னந்தனியே வந்தவரை வீதியிலிருந்த இருவர் கூட்டம் நோக்கி கூட்டி வந்திருந்தனர். சோபையிழந்த கூட்டம் இந்த சுவாரசிய நிகழ்வினால் பன்மடங்கு உற்சாமடைந்தது. நிகழ்வும் வரலாற்று நினைவானது.
இதனோடு சேர்த்தாற்போல் மற்றுமொரு வரலாற்று நிகழ்வும் பதிவானது. கூட்டத்தில் வரவேற்பு உரையாற்றிய மூத்த போராளி இப்ராஹிம் வைத்தியர் சமயோசிதமாக ஒரு வேண்டுகோளை வைத்தார். "எமதூருக்கு ஹெலி இறங்குவதற்கு ஒரு மைதானம் தேவை". அஷ்ரபும் ஏற்றுகொள்ள எமதூரின் இளைஞர்களின் அற்பணிப்புகளுடன் "அஷ்ரப் சதுக்கம்" என்ற பெயரில் (அஹ்ரபின் பெயரின் உருவான முதல் மைதானம் என அப்போது பிரச்சரம் செய்யப்பட்டமை நினைவிருக்கிறது) மைதானம் உருவாவதற்கான முதற்கட்ட வேலைகள் முடுக்கி விடப்பட்டன.
பரிதாபம் அஷ்ரப் பெயரில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட அஷ்ரபின்
அந்த வரலாற்று நிகழ்வுடன் சம்பந்தப்பட்ட மைதானம், அஷ்ரபின் வாரிசுகளாக பிதற்றிக்கொள்ளும் அஷ்ரபை நினைவு கூறுவதில் தன் புகழைபறைசாற்றும் அரசியல் வாதிகள் (கட்சி பேதமின்றி கிட்டத்தட்ட எல்லா நிகழ்கால அரசியல் வாதிகளும்) போட்டி போட்டுக்கொண்டு அபிவிருத்தி செய்ய வேண்டிய அந்த மைதானம், கவனிப்பாரற்று கிடப்பது மனதிற்கு வேதனை அளிப்பதோடு வேடிக்கையாகவும் இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அஷ்ரபின் அரசியல் மற்றும் இரத்த வாரிசாக பறைசாற்றும் ஒருவர் இந்த மைதானத்தின் செயற்பாடுகளுக்கு நேரடி உரிமை கோரும் மாநாகர முதல்வர் பதவியில் இருந்தும் (அவர் இருப்பதுதான் பிரச்சினையோ என எண்ணுமளவிற்கு) பிரயோசனம் இல்லாமல் போனமை மேலும் வருத்தமளிக்கும் விடயமாகும். மாறாக முந்நாள் முதல்வரும் இந்நாள் விளையாட்டி பிரதியமைச்சருமான பிரதேச பாராளுமன்ற உறுப்பினர், முதல்வராக இருந்த காலத்தில் செய்த மடத்தனமான செயலினால் செயலிழந்து போயிருக்கும் திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு தற்காலிக தீர்வாக குப்பை கொட்டும் திடலாக மாற்றிய பெருமை இந்த அஷ்ரபின் வாரிசையே சாரும் என்பது கசப்பளிக்கும் உண்மை.
Thursday, June 18, 2015
பாகப்போராட்டமும் சின்னத்தம்பியும்
முட்டுக்கொடுக்க
முண்டியடிக்க வேண்டியவர்கள்- அவர்கள்
கட்டியணைத்து கனிவு
கொடுப்பாரென்றிருந்தேன்....
பாகப்பிரிவினையில் மோதிக்கொள்ளும்
பெரியண்ணர்கள் - இந்த
பாவப்பட்ட கடைக்குட்டியை....
தட்டிக்கழித்து
எட்டி உதைக்கின்றார்
தட்டிகேட்க நாதியில்லை
தட்டிக்கொடுப்பாரெவருமில்லை.........
சாய்த்திருக்க ஓரமாய்
மருதமர முனையாயினுமில்லை
குடியிருக்க கற்குகையின்
முனையாயினுமில்லை............
பொதுவான பங்குமில்லை
பாகத்திலும் உரிமையில்லை
பக்கத்து ஊட்டானின்
பாதையோரம் படுப்பதற்கோரிடம் தேடி.........
சொந்த பந்தங்கள் பாராமுகங்காட்ட
சொந்தங்காலில் எழுந்து நிற்க
சிந்தனை செய்து நிற்கும்
சின்னத்தம்பி
நமுனையூரான்.........












