Translate

Pages

Thursday, August 17, 2017

தோஷதேசம்



கிழிக்க நினைத்ததோ தென்கிழக்கை
கிழிந்து போனதோ கீலம் கீலம்!

அத்துறைக்கப்பலொரு அரக்கனினாட்சி
சதுறயிலுமொரு சிற்றரசாட்சி
கல்துறையிலோ பாவம் தூங்குமாட்சி!

முகவெற்றிலையென முழங்கியவூரின்
அகத்தினிலிலோ  பிளவுகளாயிரம்!

துருவத்திசைகளின் மருதூரார்கள்,
பிரிவினை வேண்டி பிரயத்தனிக்கிரார்கள்!

வோட்டுக்காய் செய்யும் வெளிவேசம்
வேண்டாமே இந்த வேற்றுமை கோஷம்!

Tuesday, July 11, 2017

Quo Vadis Sri Lanka Cricket?

கங்காருக்கூட்டங்க 
கடித்துக்குதறுதுகா!

கறுப்புக்கானானுகளும் 
கோலிக்கூட்டமும்
கொத்தி விரட்டுதுகா!

வங்காளப்புலிகளும் 
சிங்கத்துக்கு மேலயாங்கா!

வெல்லாத இன்டீஸும் 
வெண்டிட்டு போகுதுகா!

சவுத்து ஆபிரிக்காவும்
சவுத்த ஆபிக்காவும் 
சாத்திட்டுபோகுதுகா!

ஆப்பு வெக்கிறத்துக்கு
ஆப்புகானித்தானும் காத்துக்கிடக்குதாங்கா!

போலபோடச்சொன்னா 
நூலக்கட்டிறங்கா!

பல்லுமாளிகையில மாநாயக்காக்களிடம்
மல்லுக்கட்டிறங்கா!

சிங்கக்கூட்டமிங்கு 
அசிங்கமா சிணுங்குதுகா!

http://www.espncricinfo.com/sri-lanka-v-zimbabwe-2017/engine/match/1104482.html

Tuesday, May 9, 2017

பொம்மலாட்டம்



ஆடத்தெரிந்தவர் நீங்கள்
ஆட்டுவிக்கிறார்கள், அசிங்கம்.
பொம்மலாட்டக்காரன்
புட்டுவத்தில் மோகம்,
பொம்மைகளாய் நீங்கள் மதியிழந்து
பட்டுமாய்கிரீர்கள் பாவம்.
நூலாய் உங்கள் சங்கம்
கீழாய் நீங்கள் தொங்கம்,
பாழாய் போனது பாவம்
மேலாய் நின்ற மதிப்பு.
மூடிய கதவுக்குள்
முடிக்கப்படும் முடிவுகள்,
தேடிய கௌரவம்
தெருவோடு போகுது.
மேதைகளாய் மேம்பட்டிருந்தீர்
மமதைகளாய் கீழ்பட்டுப்போனீர்,
மரியாதைக்குரியவர் நீங்கள்
மானமிழந்து குனிகிரீர்கள்.
வழிவந்த வரப்பிரசாதம்
வழிபடும் மக்களிருக்க,
பிழிந்தெடுக்கும் பிரயத்தனம்
இழியசெயல் ஆகியதுவே.

Monday, March 27, 2017

வரலாற்றில் ஒரு பாடம்





அன்று 1990 இன் ஜூன் அல்லது ஜூலை மாதம், அப்போதைக்கு பழகிப்போன விமான குண்டு வீச்சு, 21 செக்கன்களில் தொடங்கி முடியும் ஆட்டிலறியின் இரட்டை சத்தம் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளின் சத்தம் போன்று அல்லாமல் முன்பு கேட்டிராத ஒருவித புது வெடிச்சத்தங்கள் அதிகாலையிலிருந்தே கேட்கத்தொடங்கிருந்தன. "இரவுகளில் நடந்தேறிய சம்பவங்களின் அப்டேட்களை சுபஹு தொழுகையின் பின் அறிந்து கொள்ளாக்கூடியதாயிருக்கும்" என்ற வழமையினடிப்படையில், கடலிலிருந்து நேவி தாக்கத்தொடங்கியிருந்ததாக  அறிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது.

சில நாட்களுக்கு முன்புவரை ஹெலிக்கொப்டர்களே வான் தாக்குதல்களை நிகழ்த்திக்கொண்டிருந்தாலும், ஒரு நாள் பட்டப்பகலிலேயே அப்பழுக்காக தெரியக்கூடியதாகவிருந்த, கீழிருந்து சீறிப்பாய்ந்த நெருப்புப்பந்துகளின் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக திடீரென உயர உயர எழுந்த ஹெலி, மீண்டும் வரவேயில்லை. அதன் பிற்பாடு கரத்தை வடிவிலான சிறிய ரக விமானங்களும் சாதாரண விமாங்களின் வடிவையொத்த ஓரளவு பெரிய விமானங்களுமே வான் தாகுதல்களை நடாத்திக்கொண்டிருந்தன.

அன்று பொழுது புலரத்தொடங்கியிருந்தது, வழமைக்கு மாறான நேவியின் சத்தங்களுடன் வான் கரத்தைகளின் நடமாட்டங்களும் அதிகரித்திருந்தது. சாதாரணமாக குண்டுகளையே வீசும் வான் கரத்தைகள் இன்று நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு என புகைகளை வீசிக்கொண்டிருந்தன. நாடகம் உச்சக்கட்டத்தை அடைந்து முடிந்திருந்தது. சில நாட்களாய் ஒலித்த சத்தங்களெல்லாம் இந்த வழமைக்கு மாறான சம்பவங்களுடன் அமைதியாகிவிருந்தன.

இந்திய அமைதி காக்கும் படை திருப்பி அனுப்பப்பட்டிருந்த காலமது.  பிரேமதாச அரசுடன் புலிகள் பேச்சுக்களில் ஈடிபட்டுக்கொண்டிருந்தனர். அன்று 1990.06.11; கல்முனை உவெஸ்லி கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டியின் இரண்டாவது நிகழ்விற்காக முஸ்தபா சேர் ஒன் யுவர் மார்க், கெட் செட், ரெடி என தயாராக நிற்க, எல்லோரும் அந்த "டப்" சத்தத்தினை எதிர்பார்த்திருக்க, அதற்கு பதிலாக பட பட வென வேறு தொடர் வெடிசத்தம் தொடங்கியது. ஆம் கல்முனை நகருக்கு பொருட்கள் வாங்க வந்திருந்த இராணுவ வாகனம் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் யுத்தம் மீண்டும் தொடங்கப்படுகிறது. தொடர்ந்து பல பொலீஸ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டுகின்றன, விடுவிக்கப்படுவார்கள் என்ற கருணாவின் வாக்குறுதியுடன் பிரேமதாச பொலீஸ் நிலையங்களை சரணடைய உத்தரவிடுகிறார். நிலமை தலைகீழ் ஆகிறது. சம்மாந்துறை தவிர ஏனைய பொலீஸ் நிலையங்களைச்சேர்ந்த சரணடைந்த அறுநூற்றுகுமேற்பட்ட பொலீசார் வரிசையில் நிறுத்தப்பட்டு கொல்லப்பட்ட அந்த வீர(?) வரலாற்று  சம்பவம் நடந்தேறுகிறது.( https://en.wikipedia.org/wiki/1990_massacre_of_Sri_Lankan_Police_officers )

இதே வீரர்கள்(?) தான் இந்திய படையுடன் ஒட்டியிருந்த இவர்களின் போட்டி வீரர்களால்(?) சுமார் ஒருவருடத்திற்கு முன் இதே போன்று காரைதீவு பொலீஸார் கொல்லப்பட்ட போது கொக்கரித்தவர்கள் என்பதினையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். இதனைத்தொடர்ந்து அம்பாரை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகள் யாவும் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், கல்முனையின் வாடிவீட்டுத்தொகுதியில் கடற்கரையோடு அமைந்திருந்த இராணுவ முகமானது புலிகளால் வீழ்த்தப்படமுடியாமலேயே இருந்தது. இத்தனைக்கும், பொசோன் விடுமுறைக்காக பெருமளவிலான இராணூவத்தினர் வீடுகளுக்குச்சென்றிருந்த நிலையில் சுமார் இருபத்தைந்திற்கும் குறைவானோரே முகாமுக்குள் இருந்திருந்திருந்தனர். ஆட்டிலறி மற்றும் வான் தாக்குதல்களின் உதவியுடன் சுமார் இருவாரங்களுக்கு மேலாக எதுவித சேதங்களுமின்றி தாக்குப்பிடித்துக்கொண்டிருந்தனர். எதுவித விநியோக மார்க்கங்களையோ நிரந்தர முகாங்களையோ கொண்டிராத  கல்முனை பிரதேசத்தில் நிலைத்து நின்று பாரிய தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது என்பதினை புலிகள் நிரூபித்திருந்தனர். இவ்வறான சூழ்நிலையில் பொலீஸ் நிலையங்களை சரணடையச்செய்ததானது இன்றும் விமர்சனத்திற்குரியதாவே பார்க்கப்படுகின்றது.


பறக்கத்துடிக்கும் கூட்டுப்புழுவைப்போல சிறுவன் என்ற சிறைக்குள் இருந்து சிறிது சிறிதாக விடுபட்டு சிறகடிக்க முனைந்து கொண்டிருந்தகாலம். காய்ச்சலுக்கு ஒற்றை  பெனடோலையே கொடுத்தமைக்கு எனது தந்தை டாக்கரிடம் திட்டு வாங்கிய போது, நான் வளர்ந்து விட்டதாக பெருமை பட்டுக்கொண்ட வயசு. சும்மாயிருக்க விடுமா தகவலறியும் தாகம்? நண்பர்களோடு தமிழ்வட்டையின் எல்லையை நோக்கி கால்கள் நகர்ந்தன. தமிழ்பெரியவர் இருவரின் சம்பாஷணை எமது தகவலறியும் தாகத்திற்கு தீனியானது.

"ஆமிக்காரன் கடலுக்குள்ளால ஓடிப்போயிட்டானாம்."

கோழகள் கீழைகள் என பலவாறான நக்கலான விமர்சனங்கள் வேறு. தமிழீழம் கிடைத்துவிட்டதைப்போன்ற பூரிப்பு அவர்களின் முகங்களில் அப்பட்டாய் தெரிந்தது. "பெடியன்கள் விடான்கள்" இதை நேரடியாக ஒருவர் கூறுவதினை அனுபவித்த சந்தர்ப்பம்.

இத்தனைக்கும் இந்த சமபவத்தினை தொடர்ந்து நடைபெறப்போகும் விளைவுகளைப்பற்றி ஊகிக்கத்தெரியாத அப்பாவிகளாக அந்த பெரியவர்கள் காணப்பட்டனர்.

இச்சம்பவம் நிகழ்ந்து சில நாட்களுக்குள்ளேயே அந்த அறுநூறு பொலீசாரின் அசிங்க படுகொலை குறித்து வெறியூட்டப்பட்ட நிலையில் இராணுவம் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்த பகுதிகளை நோக்கி எந்த வித பாரிய தாக்குதல்களுமின்றி இலகுவாக முன்னேறியது. ஜே வீ பீ கலவரத்தின் போது தன் இனத்தவரையே ஈவிரக்கமின்றி கொலை செய்ய பழக்கப்பட்டிருந்த இராணுவத்தின் வெறித்தனங்கள் இரண்டாம் கறுப்பு ஜூலை ஒன்றை அரங்கேறியிருந்தன. அகதிகளான எஜமானர்களால் கைவிடப்பட்ட நாய்களுக்கு மனிதப்பிணங்கள் விருந்தாயின.

இச்சம்பவங்கள் டயஸ்போராவின் வளர்ச்சிக்கு மென்மேலும் உரமூட்டுவதாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.  உலக நாடுகளின் காலூன்றியிருக்கும் டயஸ்போராக்கள் தங்களின் இருப்பிற்கு மெம்மேலும் மெருகூட்டுவதற்கு இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாதா என ஏங்குவதினை அணமைக்கால சம்பவங்கள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன. 

Tuesday, July 12, 2016

கிழக்கு விரியலும் கிழங்கு பொரியலும்







ஒட்டியொட்டி வந்து ஒட்டிக்கொண்ட
வெட்டுண்ட கிளையிலொன்று
ஒட்டுடைந்து விட்டுப்போயி
வெட்டுண்ட துண்டொன்றை
கண்டு கொண்டது!


வேற்றுமை வேதாந்தமோதிது
வேதாளம் மரமேற முனையிது!


அஞ்ஞாதவாத இருளின் பனியீரத்தை
பச்சையின்னும் முளைக்குமிதுவென
பூச்சாண்டி காட்டி பூதாகாரம் செய்யிது!


கிழங்கு பொரியல்களின் இருப்பு
கிழக்கு விரியல்களின் துரும்பு!

Tuesday, January 26, 2016

நீ திக்காய்!



நாதியற்ற நாம்
நீதி வேண்டி
நீதியை நாடுகையில்
நாதியற்ற நீதி நீதியின்றி
நீதிக்காய் நாடி நிக்க,
 நீதியே!  நீதியற்று
நீ  திக்காய் நிக்க
நாதியற்ற நமகேது நீதி,
பாதி வழியிலேயே
நீதியின்றி நாதியற்று
நாமொரு திக்காய்!

Thursday, November 12, 2015

ஆரோக்கிய வழி!

நித்தம் தொழு
நிம்மதி பெறு

சுத்தம் பேணு 
சுகதேகம் பெறு

உடநலம் பேணு 
உளநலம் காணு 

கபடம் கழை 
கண்ணியமாய் உழை 

மாற்றானை மதி 
மன்னித்து பழகு 

வேளைக்கு உறங்கு
விடியுமுன் விழி 

கலோரி கணி 
கனவளவு பணி 

நடந்து போகான்
நடக்கப்போவான் 

கண்டது கொண்டான்
நொண்டியனாவான் 

வைத்தியமென்பது வெறும் 
வேதியமல்ல 

பத்தியம் காத்து 
பக்குவமாய் வாழ்வது

Thursday, September 17, 2015

அஷ்ரப் சதுக்கம்!



முன்னெப்போதுமில்லாதவாறு அஷ்ரபை நினைவுபடுத்துவதில் முனைப்புக்காட்டப்படுவதை அவதானிக்க முடிகிறது. உண்மையிலேயே அன்பு வைத்து நினைவூட்டிக்கொள்ளும் கொள்கைக் காரர்களுக்கிடையில், எதிர் நோக்கும் உள்ளூராட்சிமன்ற தேல்தல்களை நோக்கிய கொள்ளைக்காரர்களின் போலி வேசமும் நினைவூட்டலை உத்வேகம் கொள்ளச்செய்கிறது. அஷ்ரபை நினைவூட்டுவதன் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதிலேயே பலரும்  முனைப்பாயிருப்பது வேடிக்கையாகவிருக்கிறது. இத்தனைக்கும் ஒரே காரணம் சொந்த செயற்பாடுகளில் நம்பிக்கையில்லாத அரசியல் முதுகெலும்பின்மையேயாகும்.

இவ்வாறான நிலையில் ஒரு வரலாற்று நிகழ்வினை மீட்டிப்பார்க்கிறேன்..,

 அது 1993/94 காலப்பகுதி டீ.பீ.விஜேதுங்க அப்போதைய ஜனாதிபதி, அரசியல் காய் நகர்த்தல் நடவடிக்கையாக தள்ளிப்போயிருந்த  கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பை செய்கிறார். உசுப்பேத்தல் தந்திரத்தில் உயர்ந்த நிலையிலுருந்த அஷ்ரப் அரசியல் எதிர்காலத்தை நன்றாக கணக்குப்பார்த்து சவாலொன்றை விடுகிறார்.

"அம்பாரையின் முஸ்லிம் பெரும்பாண்மை பிரதேச சபைகளில் ஒன்றையாவது தோற்றால் எனது பாராளூமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன்".

இதுதான் சவால். கணக்கின் தீர்வு; சவாலை வென்றாலும் வெற்றி, தோற்றாலும் வெற்றி.


உசுப்பப்பட்டது, முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள்(?) மட்டுமல்ல அன்றைய பிரதான எதிரியான ஐ. தே. க யினரும்தான். ஐ. தே. க வின்
உள்ளூர் பிரபலங்களுக்கு மேலதிகமாக ஏசிஎஸ் ஹமீத், அஸ்வர், எம் எச்
 முஹம்மத் உட்பட அக்கட்சியின் முழு பலத்தோடு அதிகார பலமும் பிரயோகிக்கப்பட்டது.

இதேர்தலில் தமிழ் கட்சிகள், இயக்கத்தாரின் எதிர்ப்புகள் காரணமாக போட்டியிடுவதிலிருந்து விலகியிருந்தததனால், தமிழ்மக்கள் அஷ்ரபை பழி தீர்க்க ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த முனைந்தனர்.  இதனை சாதகமாக்கிய மன்சூர் உட்பட்ட ஐ தே க யினர் மதுவினை காட்டி தமிழ் மக்களை கவருவதில் கவனம் செலுத்த தொடங்கியிருந்தனர். நிலைமையின் பாரதூரத்தை விளங்யிய தக்பீர் மந்திர போராளிகளும் அதே உக்தியை பயன்படுத்த முனைந்தமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. (தக்பீரில் களப் போராளிகள் திளைத்திருந்த வேளை  தலைமைப்போராளிகள் பலர் தண்ணியில் திளைத்திருந்தமை வேறு விடயம்).

அஷ்ரப் சூறாவளிப் பிரச்சாரத்தின் (அவ்வேளை அவ்வாறுதான் அழைக்கப்பட்டது) உச்சக்கட்டமாக ஹெலிக்கொப்டரில் ஊரூராக பறந்து கொண்டிருந்தார். அதன் ஒரு கட்டமாக எனது நற்பிட்டிமுனை கிராமத்திலும் ஹெலிகொப்டர் இறங்க ஏற்பாடாயிருந்தது. ஆலையடிச் சந்தியில் கூட்டம் ஏற்பாடாயிருக்க பக்கத்திலிருந்த சிறு வளவினை ஹெலிகொப்டர் அனுபவமில்லாத எம்தூர் போராளிகள்(?) இறங்குதளமாக ஆயத்தம் செய்திருந்தனர். அஷ்ரபோடு ஹெலிக்கொப்டரையும் பார்த்துவிடலாமென்ற ஆவலில் பலரும் காத்திருக்க, இறங்காமல் வட்டமிட்டுக்கொட்டிருந்த ஹெலி திடீரென அண்மித்து வந்து காணாமற் போனது. மீண்டும் தென்பட்ட ஹெலி தூரமாய் பறந்து மாயமாய் போனது. எல்லோருக்கும் ஏக்கம் கலந்த ஏமாற்றம் "அஷ்ரபுமில்லை", "ஹெலியுமில்லை".  சோபையிழந்த கூட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. திடீரென ஆலையடி வடக்கு வீதிப்பக்கம் சலசலப்பு. ஆமாம் அஷ்ரப்??? அது அஷ்ரப் தான் வீதியில் நின்ற இருவரின் வழித்துணையோடு கூட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.  ஏற்பாடாயிருந்த வளவு பொருத்தமில்லாதலால் சில நூறு மீட்டர்கள் உள்ளேயிருந்த மையித்துப்பிட்டியில் இறங்கி மதிலேறி
தன்னந்தனியே வந்தவரை வீதியிலிருந்த இருவர் கூட்டம் நோக்கி கூட்டி வந்திருந்தனர். சோபையிழந்த கூட்டம் இந்த சுவாரசிய நிகழ்வினால் பன்மடங்கு உற்சாமடைந்தது. நிகழ்வும் வரலாற்று நினைவானது.

இதனோடு சேர்த்தாற்போல் மற்றுமொரு வரலாற்று நிகழ்வும் பதிவானது. கூட்டத்தில் வரவேற்பு உரையாற்றிய மூத்த போராளி இப்ராஹிம் வைத்தியர் சமயோசிதமாக ஒரு வேண்டுகோளை வைத்தார். "எமதூருக்கு ஹெலி இறங்குவதற்கு ஒரு மைதானம் தேவை".  அஷ்ரபும் ஏற்றுகொள்ள  எமதூரின் இளைஞர்களின் அற்பணிப்புகளுடன்  "அஷ்ரப் சதுக்கம்" என்ற பெயரில் (அஹ்ரபின் பெயரின் உருவான முதல் மைதானம் என அப்போது பிரச்சரம் செய்யப்பட்டமை நினைவிருக்கிறது) மைதானம் உருவாவதற்கான முதற்கட்ட வேலைகள் முடுக்கி விடப்பட்டன.

பரிதாபம் அஷ்ரப் பெயரில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட அஷ்ரபின்
அந்த வரலாற்று நிகழ்வுடன் சம்பந்தப்பட்ட மைதானம், அஷ்ரபின் வாரிசுகளாக பிதற்றிக்கொள்ளும் அஷ்ரபை நினைவு கூறுவதில் தன் புகழைபறைசாற்றும்  அரசியல் வாதிகள் (கட்சி பேதமின்றி கிட்டத்தட்ட எல்லா நிகழ்கால அரசியல் வாதிகளும்) போட்டி போட்டுக்கொண்டு அபிவிருத்தி செய்ய வேண்டிய அந்த மைதானம், கவனிப்பாரற்று கிடப்பது மனதிற்கு வேதனை அளிப்பதோடு வேடிக்கையாகவும் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அஷ்ரபின் அரசியல் மற்றும் இரத்த வாரிசாக பறைசாற்றும் ஒருவர் இந்த மைதானத்தின் செயற்பாடுகளுக்கு நேரடி உரிமை கோரும் மாநாகர முதல்வர் பதவியில் இருந்தும் (அவர் இருப்பதுதான் பிரச்சினையோ என எண்ணுமளவிற்கு)  பிரயோசனம் இல்லாமல் போனமை மேலும் வருத்தமளிக்கும் விடயமாகும்.  மாறாக முந்நாள் முதல்வரும் இந்நாள் விளையாட்டி பிரதியமைச்சருமான பிரதேச பாராளுமன்ற உறுப்பினர், முதல்வராக இருந்த காலத்தில் செய்த மடத்தனமான செயலினால் செயலிழந்து போயிருக்கும் திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு தற்காலிக தீர்வாக குப்பை கொட்டும் திடலாக மாற்றிய பெருமை இந்த அஷ்ரபின் வாரிசையே சாரும் என்பது கசப்பளிக்கும் உண்மை.

Thursday, June 18, 2015

பாகப்போராட்டமும் சின்னத்தம்பியும்


முட்டுக்கொடுக்க
முண்டியடிக்க வேண்டியவர்கள்- அவர்கள்
கட்டியணைத்து கனிவு
கொடுப்பாரென்றிருந்தேன்....

பாகப்பிரிவினையில் மோதிக்கொள்ளும்
பெரியண்ணர்கள் - இந்த
பாவப்பட்ட கடைக்குட்டியை....

தட்டிக்கழித்து
எட்டி உதைக்கின்றார்
தட்டிகேட்க நாதியில்லை 

தட்டிக்கொடுப்பாரெவருமில்லை.........

சாய்த்திருக்க ஓரமாய்
மருதமர முனையாயினுமில்லை
குடியிருக்க கற்குகையின்
முனையாயினுமில்லை............

பொதுவான பங்குமில்லை
பாகத்திலும் உரிமையில்லை
பக்கத்து ஊட்டானின்
பாதையோரம் படுப்பதற்கோரிடம் தேடி.........

சொந்த பந்தங்கள் பாராமுகங்காட்ட
சொந்தங்காலில் எழுந்து நிற்க
சிந்தனை செய்து நிற்கும்
சின்னத்தம்பி
நமுனையூரான்.........

Tuesday, October 28, 2014

தேடியோடு



தடுப்பது தண்ணீரைத்தான்
தாகத்தையல்ல

எழுந்துநில்
தேடியோடு

பேராண்மை பேசுகிறது
பெரும்பான்மை

சும்மா கிடைத்ததினால்
சோம்பேறியாயிருந்தாய்
தாகம் தெரியவில்லை
தண்ணீரருமை புரியவில்லை

எழுந்துசெல்
தேடியோடு

தமக்கென கொண்டிருக்கும்
தண்ணீர் சுனையை
நாளைய சந்ததியாவது

தடுப்பது தண்ணீரைத்தான்
தாகத்தையல்ல

எழுந்துசெல்
தேடியோடு

Wednesday, May 28, 2014

ஜனநாயகம்





தக்(thug)களுக்காக 
மக்களைக்கொண்டு

தக்களே செய்யும் ஆட்சி!



பேருக்கென்னவோ ஜனஞாயம்

யாருக்குமிங்கேது நியாயம்!

ஊருக்கெம்பி வேணுமென்றிருந்தோம்

யாருக்கும் லாபமில்லையிங்கு
பேரோடு முடிஞ்சி போச்சி!



யாது செய்யினும் பிரச்சினை

ஏதும் எனக்கில்லை அடுத்தமுறையும்

யானே தளபதி என்கிறார் -நாமும்

ஏனோ ஜனநாயகமென்கிறோமின்னும்!



நோக்கு முழுவதுவும் அடுத்த கதிரை- கொடுத்த

வாக்கு யாவும் அடுத்தமுறை வரையும்

தேக்கு நிலையிலிருக்க நம்பி

வாக்கு போட்ட மாந்தரிற்கு

ஏக்கமட்டுமே எஞ்சிக்கிடக்குதிங்கு!





ஆட்சியதிகாரபோதை அரசனாட்டம் போடவைக்குது

அடக்குமுறையும் அடாவடியும் அரசாளமுனையிது

மீட்சி வேண்டிநிற்கும்மக்காள் நாடுவதுவோ -உறு

மீனைக்காத்திருக்கும் எதிர்க்கட்சியிடமல்லோ!

Saturday, April 19, 2014

பள்ளிப்பாசம்.



பள்ளிமதில் உடைக்கப்படுகிறது,
பாதை விஸ்தரிப்பாம்!
பள்ளிமதில் உடைக்கப்படுகிறது,
பள்ளிக்கு வந்தவரெல்லாம்
பக்குவமாக பார்த்தபடி செல்கிறார்.
பரதேசிகள் இரண்டு,
பாதையோரம் பேசிக்கொள்கின்றன,
"பாரிந்த அநியாயத்தை,
பள்ளிமதிலை உடைக்கிறானுகள்",ஆஹ்,
பக்திமான்கள் பதறுகிறார்கள்?
பள்ளிமதிலென்ன பள்ளியையே உடைத்தாலும்
பரதேசிகளுக்கென்ன கவலை
பள்ளிக்கு போகாதவரை?

Tuesday, December 24, 2013

இஸ்லாமொபோபியாவும் குளிர்காயும் குற்றவாளிகளும்!





ஹாஜி பட்டமேந்திய கடத்தல் மன்னர்கள்
ஹெரோயின் மொத்த விநியோகத்தர்கள்
கலப்படம் செய்வதில் கலாநிதிகள்
கவசமாய் போனது இஸ்லாமோபோபியா!

மிருகவதையில் முன்னே நிற்போர்
மனிதப்பண்பிற்கு புச்சர்கள்
அழுக்கு யாவாரத்தின் உதாரணர்கள்
அடைக்கலம் தேடுவது இஸ்லாமோபோபியாக்குள்!

காய் நகர்த்தலின் முன்னொடிகள்
கபடச்செயல்களில் ஜாம்பவான்கள்
வக்கில்லா அரசியல் வாதிகள்
வாக்குவங்கிக்கிதவுவதுவும் இஸ்லாமோபோபியா!

வயிற்றுபிழைப்பு கபுறடிகள்
வரையறயில்லா வழிபாடுகள்
வேலைக்குதவா புரோகிதங்கள்
வாழமுனைவதுவும் இஸ்லாமோபோபியாவுக்குள்!
Photo: இஸ்லாமொபோபியாவும் குளிர்காயும் குற்றவாளிகளும்
*****************************************************

ஹாஜி பட்டமேந்திய கடத்தல் மன்னர்கள்
ஹெரோயின் மொத்த விநியோகத்தர்கள்
கலப்படம் செய்வதில் கலாநிதிகள்
கவசமாய் போனது இஸ்லாமோபோபியா!

மிருகவதையில் முன்னே நிற்போர்
மனிதப்பண்பிற்கு புச்சர்கள்
அழுக்கு யாவாரத்தின் உதாரணர்கள்
அடைக்கலம் தேடுவது இஸ்லாமோபோபியாக்குள்!

காய் நகர்த்தலின் முன்னொடிகள்
கபடச்செயல்களில் ஜாம்பவான்கள்
வக்கில்லா அரசியல் வாதிகள்
வாக்குவங்கிக்கிதவுவதுவும் இஸ்லாமோபோபியா!

வயிற்றுபிழைப்பு கபுறடிகள்
வரையறயில்லா வழிபாடுகள்
வேலைக்குதவா புரோகிதங்கள்
வாழமுனைவதுவும் இஸ்லாமோபோபியாவுக்குள்!

Sunday, June 16, 2013

இன்றில்லா அன்றுகள்!


ஈர்க்குச்சுருக்கு ஓணான் வேட்டை

ஊரெல்லை தாண்டிய கிட்டிப்பொல்லுப்பாட்டம்

ஊர் கூடி ரசித்த நாயும் இரைச்சித்துண்டும், கட்டைப்பந்து, ஜம்....

ஊர் முழுக்க வியாபித்தோடிய கள்ளன் பொலிஸ்

ஓதப்பள்ளியில் ஓடி விளையாடிய உத்தரவோ 'அங்கால சுங்கான் இங்கால கெழுத்தி".....

பெத்தாட வளவு நொண்டியாட்டம்

தென்னை மட்டை மாட்டுப்பட்டி

வாகனக்கனவிற்கு தீனி போட்ட 'டயர்' 'பில்டர்' 'ரிம்'....................."அரே............ அரே...."

வில்லுக்கு வீணாகிய பறவைக்குஞ்சுகள்

அங்கால வட்டையோட வில்லடிப்போர்

பனங்காடு - வல்வட்டி பாசமான  பனிப்போர்

பல்லுக்குத்த உதவிய கிடுகு வேலி ஈர்க்கு

குடும்பமே கூடிழைத்த கிடுகு

ஊரே கூடிக்கட்டிய கிடுக்கூரை

பனம்பழம் பொறுக்கிய அதி அதி காலை

முற்றத்து பனங்கிழங்குப்பாத்தி

சேறு பூசிய குடாக்குளியல்

  தூஷணம் துதிபாடிய குழாயடிச்சண்டை

கோடைகாலத்து குடங்களின் அணிவகுப்பு

மேட்டுவட்டை களியால் செய்த யானயும் புறாவும்

தென்னையில் தொங்கிய தூக்கணாங்குருவி

கூட்டமாய் வந்த நெற்குருவிகள்

வானத்தில் கோலம் போட்ட நாணற்பறவைகள்

வெள்ள கால தூண்டில் வேட்டை

அனைவரும் போன "சூழ்" மீன் வேட்டை

வட்டையோரத்து தென்றல் தந்த தூக்கம்

 விடிவுகளை தூரமாக்கிய வீணர்சந்தி பந்தி

 அதிகாரியின் அகங்காரகுரல்கள்
"நாளைக்குப்பெரு நாளாம்........", "லாயிலாஹ இல்லல்லாஹு......",        
 "கூலூ இன்னாலில்லாஹி........."

 மோதினாரின் கவச வாகனம்

சஹரை அலங்கரித்த கிட்டங்கித்தாத்தா

நோன்பு கால கஞ்சித்தொழுகை

வித்ருக்கு முந்திய ஹவ்ழு சலசலப்பு

பெருநாளை சிறப்பித்த

பள்ளியடி சிறுவர் சந்தை


Monday, June 10, 2013

சந்தை பொறுக்கிகள்!




சந்தைக்குள் சத்தம்,
சாமானுக்காக சாமர்த்தியம்!
சத்தமின்றி சாந்தமாக
சந்தை பொறுக்கி மாடுகள்!

எச்சிலுக்கும்
எறிந்தவற்றுக்கும்
ஏந்தினிற்கும் -நம்
எம்பிகள்!

Monday, March 18, 2013

உசுப்பிய மரம்!





மரத்தை உசுப்பினார்கள்,
பழங்களுக்காக,
இலைகள் பறந்தன,
கிளைகள் முறிந்தன,
கொப்புகள் வீழ்ந்தன,

பறந்த இலைகள் சருகாகின,
முறிந்த கிளைகள்விறகாகின,
வீழ்ந்த கொப்புகள் முட்டுக்கம்புகளாயின,
ஆனாலும்,
உசுப்பியவன் உசும்பவில்லை,

பழங்களோ பகிர்ந்து கொள்ளபட்டுவிட்டன,
மரமோ அடுத்த அறுவடைக்கால உசுப்பலுக்காக.....?

Friday, August 31, 2012

உணர்வற்ற உணர்வுகள்!



உணர்வற்ற உணர்வுகள்!










உயிரில்லா உணர்வுகளின் உளரல்கள்

உணர்வற்ற உணர்வுகள்!

ஊமையின் கூக்குரல்
ஏழ்மையின் ஏக்ககங்கள்
இயலாமையின் சன்டித்தனம்
உணற்வற்ற உணர்வுகள்!

பறிக்கப்பட்ட பலஸ்தீனம் பரிதவிக்கின்ற போது பரிதவித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வுகள்
உணவற்ற உணர்வுகள்!

நியாய அரசியல் ஆட்கொண்டபோது ஆவென்ற அலரலோடு அமைதியடைந்த உணர்வுகள்
உணர்வற்ற உணர்வுகள்!

மனித உரிமைப் போர்வைக்குள்
நியாயக் காரன் அடைக்கலம் புகும் போது
மனித உரிமையிழந்து மரித்து நிற்கும் உணர்வுகள்
உணர்வற்ற உணர்வுகள்!

கலாச்சாரத்தின் பெயரில்
கலியாணம் பிழிந்தெடுக்கும் போது
சுமைதாங்கித் தந்தையின்
சுய மரியாதை உணர்வுகள்
உணர்வற்ற உணர்வுகள்!


உயிரில்லா உணர்வுகளின் உளரல்கள்
உணர்வற்ற உணர்வுகள்!


Sunday, July 15, 2012

ஆதி மனிதன் வாழ்ந்த வாழ்க்கை!


ஆதி மனிதன் வாழ்ந்த வாழ்க்கை..........

நினைத்துப்பர்ர்கவே இன்பம்........!


இந்த நவயுக வாழ்வு...........

நரக லோகத் துன்பம்...... !


வசதி வாய்ப்பு வளர்ந்த போதும்...........

வாழ்விலில்லை திருப்தி.........!


குளிர்மை தந்த குடிசை வாழ்வு......... !

முற்றக் கூடல் முழுதும் பேச நேரம் தந்தது சூசி......!

 மாட்டு வண்டி சவாரியாயினும்..........

மனதிலிருந்தது மகிழ்வு..... !



ஆதிமனிதன் வாழ்ந்த வாழ்க்கை..........

நினைத்துப்பர்ர்கவே இன்பம்........!



 மருந்த வைச்சி நுளம்பத்துரத்த..... 

விருந்துக்கு வருது குக்கல்........!

வலையப்போர்த்தி படுக்கலாமெண்டா.... 

வேர்த்து வழியுது அவிச்சல்......!

ஏசி போட்டு தூங்கலாமெண்டா....... 

வீசிங் வந்து இளைச்சல்.........!


இந்த நவயுக வாழ்வு.............

நரக லோகத் துன்பம்..... 

Wednesday, April 25, 2012

முற்போக்காய் முன்மாதிரியாய் முன்னேறுவோம்!


எனது ஓர் அனுபவத்தைப் பகிர்வதன் மூலம் தொடங்க விரும்புகிறேன். பாதை விஸ்தரிப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும் போது நிர்வாகிகளின் ஒப்புதலுடன் பள்ளிமதிலொன்று உடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மாற்றுமததினர் சம்பந்தப்பட்டிருந்ததனால் அவ்வேளை நான் பிரசன்னமாயிருக்க வேண்டப்பட்டிருந்தேன். அஸ்ர் அதானும் ஒலித்தது  தொழுகையும் தொடங்கி முடிந்தது மீண்டும் வேலைக்கு மீண்டு வந்திருந்தேன். தொழவந்தவர்கள் எவரும் எதையுமே அலட்டிக்கொள்ளவில்லை அமைதியாச் சொன்று கொண்டிருந்தனர். பாதையோரம் இருவர் பள்ளிக்குச் செல்லவில்லை தங்களுக்குள் பேசிக்கொள்கிறனர் "பள்ளியின் பதிலை உடைக்கிரான்கள்" பாருங்கள் என்ன அநியாயம்.

தம்புள்ளை பள்ளிவிடயத்திலும் இது நடக்கலாம். இது போன்ற தார்மீகத் தகுதியற்றவர்கள் பாதைக்கு வரலாம். குறிப்பாக ஜும்மா மட்டும் தொழுகைக்காரர்கள்; மாற்று மததவர்கள் மீது அசிங்கமாகக் கூக்குரல்களிடலாம், அவர்களின் சிலைகளின் மீதோ, வழிபாட்டிடங்களின் மீதோ கல்வீசுகளும் நடத்தலாம். விளைவு அந்த பேரினவாதிகளின் கனவுகளை நிஜமாக்க உதவக் கூடியாதாக  அமைந்துவிடக்கூடியது.

தம்புள்ளை விவகாரம் இரண்டுவகையான தீர்வைக் கொண்டது;

முதலாவது பள்ளிய இடம்மாற்றுவது. இதுவே எதிர்த்தரப்பாலும் ஏற்றுக்ககொள்ளப்பட்டது. இந்ததீர்வைப் பொறுத்தவரையில் மேலோட்டமாக நாம் தோற்றுப்போவதாக தோன்றுகிறது. ஆனால் அறுபதுகளில் தொடங்கப்பட்டதாக் கூறப்படும் பள்ளி இதுவரை காலத்திற்கும் தகரக் கொட்டில் அளவிற்கே வளர்ந்திருக்கிறது. இந்ததீர்வு அதற்கும் தீர்வைத்தரும். வேண்டிய உயரத்திற்கு பள்ளியைக் கட்டிக் கொள்ளலாம். அதைச்சுற்றி கூச்சமோ அச்சமோ இன்றி கிராமத்தையயே உருவாக்கிக் கொள்ளலாம். இங்கு ஒரு மாற்று வாதம் முன்வைக்கப்படலாம். முன்பு அனுராதபுரத்தில் மௌனியாகவிருந்தோம், இப்போது தம்புள்ளையில் நிற்கிறது. விட்டுக் கொடுத்தால், மேலும் உத்வேகம் பெற்று மற்றய இடங்களிலும் கைவப்பர். அனுராதபுரத்தைப் பொறுத்தவரையில் நாம் செய்ய வேண்டியதை அவர்கள் செய்தார்கள். மக்களிடம் அது பற்றிய போதியஅறிவு  இருந்ததால் சில கீச்சுக் குரல்களைவிட பொதுவாக உள்ளூரப்பூரித்துக் கொண்டோம். தம்புள்ளை விடயத்தில் விட்டுக் கொடுத்தால்? இதற்கான விடையை அடுத்த தீர்வில் ஆராயலாம்.

இரண்டாவது தீர்வாக நாம் விடாப்பிடியாக நிற்பது. முதலில் ஒன்றை நாம் நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும். இங்கு பிரச்சினையை உண்டுபண்ணுவது ஒட்டு மொத்த சிங்கள பௌத்தர்கள் அல்ல. பெரும்பாண்மையான பெரும்பாண்மையினர் நம்மை மனதார ஆதரிக்கின்றனர். நமது விடாப்பிடி அந்த உள்ளங்களை இழப்பதற்குக் காரணமாகிவிடலாம். மேலும், நமது விடாப்பிடி அந்தக் கலகக்காரர்களை கட்டிப் போடப் போவதில்லை. அவர்கள் பயந்து ஓய்ந்து விடப் போவதுவுமில்லை.
ஆக மொத்தத்தில்  இந்தப் பிரச்சினையின் தோற்றம் நாம் முற்போக்காக முடிவுகள் எடுப்பதன் மூலம் நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதோடு மாற்று மதத்தவர்களின் உள்ளங்களையும் வெற்றி கொள்ளக் கூடியதாகவும் அமையும்.
நாம் நபியை முன்மாதிரியாகக் கொண்டவர்கள். ஹுதைபியா உடன்படிக்கையில் நமக்கு நிறையவே முன்மாதிரியான பாடங்கள் உள்ளன. ஏன் அண்மைய நம் நாட்டு வரலாறும் சான்று பகர்கிறது. புலிகளுக்குச் சாதகமாக ஏற்படுத்தப்பட்ட ரணில்-பிரபா ஒப்பந்தம் புலிகளின் ஒழிவிற்கு காரணமாய் நின்றது.
இறைவனே நன்கறிந்தவன்.......

Monday, April 23, 2012

உம்ரா பிஸ்னஸ்




மதிகெட்ட மணியடிமைகளின் மார்க்கெட்டிங் மதினுட்பம்-உம்ரா பிஸ்னஸ்
***
குடும்பத்துடன் ஹொலிடே கும்மாளம் - வருகையில் ஹாஜி வேசம் வேறு
***
ஹஜ்ஜுக்கு காசு காணாட்டி கடமை கழற்ற கால் ஹஜ்ஜு-வியாபார விஸ்தரணம்
***
ஊரானுதவியில் உம்மாவையனுப்பி  ஒதுங்கிக்கொள்ளும் அருமைப்புத்திரர் -புரட்டப்படும் பத்துவா
***
சகன் சாப்பாடு, சடங்கு சலாம்-பரிதாபம் பாதி ஹாஜிகள்
***
செலவை சீர் செய்ய சங்கிலி சாமான் -வழிகெடுக்கும் வழிகாட்டிகள்
***
சிக்கித்தவிக்கும் சொந்தத்துக்கு சல்லிகொடுக்க சிந்திக்கும் சில்லறைஹாஜி - பக்கெற்று பணம் பகட்டுப் பிக்னிக்கில்
***
நற்பணிகளில் நாடப்பட்டசெல்வங்கள்-விமானப்பயணங்களில் வீண்விரயம்
***
உண்மையில் உம்ரா செய்யும் உள்ளங்களுக்கு உளமார்ந்த துஆக்கள்


Monday, June 27, 2011

காட்டிக் கொடுக்கும் காற்சட்டை!


பொதுவாக ஆடை விடயத்தில் பெண்களைப்பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். ஆண்களப் பொறுத்த வரையில் அளவிற்கதிகமாக (கரண்டைக் காலுக்குக் கீழ்) அணிவதக் குறித்தே விமர்சனம் இருந்தது. அரை நிர்வானம், தலையை மறைப்பது, இடுப்பைக் காட்டுவது, மெல்லிதாய் அணிவது, இறுக்கமாய் உடுப்பது என பெண்டிரை சுற்றியே விமர்சனங்கள் வீசப்பட்டிக் கொண்டிருந்தன.

காலம் சுழன்று, அமெரிக்க சிறைக் கைதிகளின் உடையை ஆண்கள் நாகரிகமாகக் கருதி உடுத்து, இல்லை இல்லை விடுத்து மகிழும் காலமொன்று வந்திருக்கிறது. மேற்சட்டை மேலே செல்ல, காற்சட்டையோ பெயருக்கேற்றாற் போல அரையையும் மீறி தொடையைத் தேடிக் கொண்டு உள்ளாடைகளுக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன.

வேதனையை பல மடங்குகளாக்கும் விடயம் என்னவென்றால், தொழுகையின் உன்னத நிலையான சுஜூது வேளையில் தெரியும் தரிசனங்களே! சிலருக்கு இது தெரியாமல் செய்யும் தவறாகவே இருக்கிறது. தொப்பி போடுங்கள், தொலைபேசியை நிறுத்தி வையுங்கள், போன்ற வேண்டுகோள் விளம்பரங்களால் பள்ளிகளை அலங்கரிக்கும் நிருவாகங்கள் இந்த விபரீதமான தொழுகையைப் பாழடிக்கும் விடயத்தக் கண்டும் காணாது இருப்பது வாதனையளிக்கும் வடயமாகும்.

குர் ஆன் ஹதீஸ் என பேசித்திரியும் சில தௌஹீத் சகோதரர்களும் இந்த விடயத்தில் அசமந்தையாக இருப்து மட்டுமல்லாமல் அவர்களே இந்தப் பிழையைச் செய்வதும் கவலையளிப்பதாகவே உள்ளது.

Thursday, May 19, 2011

மெல்லத் தமிழ் இனிச் சாகும்!

ரஸியாவைச் சேர்ந்த தமிழ் பேராசிரியரை சன் ரீவியின் வணக்கம் தமிழகம் பேட்டிகண்டபோது பிறவியில் தமிழன் என்ற ரீதியில் வெட்கப்பட்டுக் கொண்டேன். சரளமாகத் தமிழ் பேசிய அவர் முன்னால் அந்த அறிவிப்பாளர் தமின்கிலிசில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார். இந்த நிலைக்கு ஒட்டு மொத்த பழியையும் அந்த அறிவிப்பாளரின் மீது போட முடியாது.

தொல்காப்பியரின் பெருமை பேசும் தமிழ் மொழியிடம் ஒரு கௌரவச்சிக்கல் இருக்கிறது. பொதுவாக பிற மொழிச் சொற்களையும் ஒலிகளையும் உள்வாங்கப் பின்னிற்பது மாட்டுமல்லாமல் அவற்றின் மீது தனது இலக்கணப்புலமையைத் திணித்து திரிபுபடுத்திச் சின்னாபின்னாப்படுத்திப் பெருமைப்பட்டுக்கொள்வது. எந்தளவிற்கெனில் அந்தச் சொல்லில் இல்லாத எழுத்துக்களை அறிமுகப்படுத்துவது, ஊர்களின் பெயர்களை மொழி பெயர்ப்பது, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்கு பெயர் சூட்டி மகிழ்வது என இன்னொரன்ன சில்மிசங்கள்.

"லங்கா" என்ற எமது நாட்டின் பெயரை முதலில் 'ல்' வும் இறுதியில் 'கா' வும் வரமுடியாது எனக்கூறி "இலங்கை' ஆக மாற்றி துவம்சம் செய்தமை வரலாற்றில் என்றும் மறக்க முடியாது. இதுபோல, களுத்துறை, நீர்கொழும்பு, கொழும்பு, சிலாபம், காலி என பல உதாரணங்களைக் கூறலாம். பிரதியீடாக நாம் மடகளபுவ, ட்றிங்கோ, யாபனய எனப் பறிகொடுக்கவும் நேர்ந்தது.

நாம் ஒரு முஸ்லீம் என்ற வகையில் இந்தச் சிக்கலால் மிகவும் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறோம். இசுலாம், இறசூல், மசீது, என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். இருந்தாலும் தற்காலத்திலோரளவு சுதாகரித்துள்ளமையும் காணலாம். இஸ்லாம் எனவும், றஸூல் எனவும் எழுத முடிந்துள்ளது.

மின்னழுத்தி, துவிச்சக்கரவண்டி, பேரூந்து, விண்கலம் போன்ற காரணப் பெயர்களை அகராதியில் சேர்த்து அவனவன் மூளையைப்பாவித்து கண்டுபிடிக்க நாமோ நமது வறட்டுகௌரவத்தைப் பாவித்து பெயர் சூட்டிக் கொண்டிருந்தோம்.

விளைவு ஊரோடு ஒத்தோட முடியாமல் சிக்கித்தவித்து எம்மாவர்களுக்கே அறிமுகமில்லாத மொழியாக்கப்பட்டு அன்னியப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது நம் செம் மொழி.

அவன் தனது மொழிக்கு 'இங்லிஷ்' என பெயர் வைத்திருக்க எமது பெருமை அவனுக்கு 'ஆங்கிலம்' எனச் சூட்டி மகிழ்ந்தது. விளைவு, தமிழ் பேசிய எம்மவர்கள், 'தமிங்கிலம்' பேசத்தொடங்கினார்கள், பின்னர் 'தமிங்கிலிஷ்' ஆக மாறி அந்த ஒரே அடயாளமாகிய 'த' வையும் தவறவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

Wednesday, August 25, 2010

அழகு!



கோழியின் கூவலும் பூவழகும் ஆணுக்கு!
குயிலின் குரலழகும் ஆணுக்கு!
மயிலின் தோகையழகும் ஆணுக்கு!
மாட்டின் ஏரியும் எடுப்பும் ஆணுக்கு!
சிங்கத்தின் சடையழகும் ஆணுக்கு!
யானயின் கொம்பழகும் ஆணுக்கு!
எமக்குமட்டும் ஏனிந்த வேறுபாடு?
இல்லையில்லை நாம் தான் உணரமறுக்கிறோம்!

Wednesday, August 11, 2010

வீடு: ஒரு பார்வை





அனாவசியத் தேவையாக்கப்பட்ட ஓர் அத்தியாவசியத் தேவை
***
தேவையை மிஞ்சிய அநாகரிக அலங்காரம்
***
தளத்திலொரு மூலை வசிப்பிடம் தட்டுக்களோ ஜந்துகளின் புழுதி, வாசஸ்தலம்
***
இத்தனை அடுக்குகளும் அறைகளும் காரணம் புரியவில்லை: ஊரோடு ஒத்தோடு
***
கட்டிடக் கலைஞரின்(?) கைவரிசை கடைசியில் ஒட்டுண்ணி வலைகளின் சீர்வரிசை
***
மொத்தப் பொருளாதாரத்தின் புதை குழி
***
வாழ்நாள் வருமானத்தின் வீணான விதைப்பிடம்
***




Wednesday, March 24, 2010

ஏன் என்னைத் தடுத்தார்கள் வகுப்பறையே!

***
உன் அரவணப்புக் கிடைத்ததை "தவிர்க்க முடியாத தவறாக" எண்ணினார்களோ?
***

Friday, February 12, 2010

ராஜ சேவை.

சம்பளம் நிரந்தர வருமானம்
கிம்பளம் பிரதான வருமானம்.
***
மயிர் பிடுங்க மணித்தியலங்கள்- கவனித்தால்
மலை பிடுங்கவே மணித்துளிகள்.
***
சட்டம் மதிக்கப்பட வேண்டும்
சனம் மிதிக்கப்பட்டாலும்.
***
ஊதியம் உரிமை
வேலைக்கு வேண்டும் வேறாக.
***
அரசியல் வாதி நாடா வெட்ட
அருகில் டை கட்டி கை தட்டு
அழைக்கப்பட்ட சிரிப்பைக் காட்டி
***
சுயமாய் சமளிக்க முடியாதவர்களின்
சுதந்திர சுற்றாடல்.
***
பெண்டிருக்கு பரிந்துரைக்கப்பட்ட
பொருத்தமான புகலிடம்.
***
அரசியல் ஆதிக்கம், மேலிடத்தின் அதிகாரம்
அடங்கினால்போதும் அடுக்கடுக்காய் அலுவலிருந்தாலும்
அஞ்ச அவசியமில்லை.
***
வெளியார் சேவையில் வெடுக்கென வேலை
அரச சேவையில் அலட்சிய அரைமனதுடன் ஆறுதல் சேவை. வைத்தியத்துறை மெத்தான உதாரணம்.
***
அனைத்துமிருக்க கடின வேலைகளுக்கு கொந்தூரத்து
ஆளுக்காள் வீதாசாரத்தில் விளையாட்டு.
***
வேண்டாத செய்முறைச் சிக்கல்கள்
வீணாய்ப் போகும் மக்கள் சொத்துகள்.
***
வாயிழந்து வழியின்றி தவிக்கும்
வரியிறுப்பாளர் சமுதாயம்.
***

Friday, February 5, 2010

வறட்டுக்கௌரவச் சிக்கல்

காருக்குப் பெற்றோல் நிரப்ப ஓ டீ யிலும் பீபீயிலும் வீணாகும் வாழ்க்கை,
சில பத்து மீற்றர் தூரத்துப் பள்ளிக்குக் கூட நடக்க முடியாத சிக்கல்,
நடைப்பயிற்சி வேண்டி மிசின் வாங்கும் நிலை,
சில வேளை பள்ளிக்கே போக முடியாத பாபம்,
சனத்திற்கு முன்னால் சாதாரணமாய் நிற்க,
நடக்க முடியாத அவதி,
சாளை மீன் பொரியலும் சுங்கான் சுண்டலும் ருசிக்க இயலா பரிதாபம்,
மார்க்கட்டில் மலிவாய் வாங்க முயாம -fபூட் சிட்டியில் மாட்டு,
இன்னும் இன்னோரன்ன அவதிகள், சிக்கல்கள், மாட்டுகள், பரிதாபங்கள்,................
படித்தோரே!
மீண்டு வாருங்கள் இந்தப் பரிதாப வறட்டுக் கௌரவத்திலிருந்து..........

Tuesday, January 5, 2010

பதவி!

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள் நீங்கள் அதைக் கேட்டுப் பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." ஆதாரம்: புகாரி

Wednesday, December 23, 2009

ஏவி விலக்கி எடுத்துக் கூறி- தான் மட்டும்
எடுத்து விடுத்து நடக்காதோன்
தாவிப் பற்றி ஒளி பரப்பி
தேய்ந்து போகும் திரிக்கொப்பான்.

Monday, December 21, 2009

மீலாத் விழா நபி வழியா? புது வழியா?

உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அழ்ழாஹ் அறிவான். அழ்ழாஹ் ஒவ்வொருபொருளையும் அறிந்தவன் என்று(நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 49:16)ரபீஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் சிலர்மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் மூலம் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள மீதானஎமது அன்பை வெளிப்படுத்துகின்றோம் என்ற பெயரில் பல்வேறு அனாச்சாரங்களைஅரங்கேற்று கின்றனர்.அழ்ழாஹ்வின் பேருதவியால் தவ்ஹீத் எழுச்சியின் காரணமாக மீலாத் விழாவின்பெயரால் அரங்கேற்றப்படுகின்ற அனாச்சாரங்கள் பல ஊர்களில் வழக்கொழிந்துபோனாலும் சில பிரதேசங்களில் இன்றும் இவை அரங்கேற்றப்பட்டு வருவதால் அதுதொடர்பான தெளிவுக்காக இவ் ஆக்கம் வரையப்படுகின்றது.அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அவசியம்அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நேசிப்பது விசுவாசத்தின் அடிப்படைகளில்ஒன்றாகும். தூதர்(ஸல்) அவர்களை நேசிக்காத ஒருவர் ஒருபோதும் விசுவாசியாகஇருக்க முடியாது. இதை அருள்மறை பின்வருமாறு கூறுகின்றது.‘நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி(முஹம்மத்) தான் முன்னுரிமைபெற்றவர்’ (அல்குர்ஆன் 33:06)மேலும், ஒரு மனிதனின் பெற்றோர், உற்றார், உறவினர், சொத்து, செல்வங்கள்அனைத்தையும் விட அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேசத்திற்குரிய வர்களாகமாறாத வரை அவர் இறை நம்பிக்கையாளராக முடியாது என்பதை பின்வரும் நபிமொழிமிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றது.‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்)அவர்கள் உமர் பின் அல்கத்தாப்(ரழி) அவர்களின் கையைப்பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்)அவர்களிடம், அழ்ழாஹ்வின் தூதரே! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விடநீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இல்லை என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாகஉம்மை விடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவனாக ஆகும் வரை(நீர் உண்மையானஇறை நம்பிக்கையாளர் ஆக முடியாது) என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்)அவர்களை நோக்கி உமர்(ரழி) அவர்கள், இப்போது அழ்ழாஹ்வின் மீதாணையாக!என்னைவிடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றார்கள். அதற்குநபி (ஸல்) அவர்கள் இப்போதுதான் உமரே! (சரியாகச் சொன்னீர்கள்) என்றுகூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹிஷாம்(ரழி), நூல்:ஸஹீஹுல் புஹாரி-6632)அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை எவ்வாறு நேசிக்க வேண்டும்?அருள்மறையாம் திருமறை கூறுகின்றது. ‘நீங்கள் அழ்ழாஹ்வை விரும்பினால்என்னைப் பின்பற்றுங்கள்! அழ்ழாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களைமன்னிப்பான். அழ்ழாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன் என்றுகூறுவீராக!’ (அல்குர்ஆன் 03:31)அழ்ழாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் ஒரு விடயத்தை மார்க்கம் என்றுதீர்மானித்து விட்டால் அதில் கூட்டல், குறைத்தல் செய்யாது சுன்னாக்களைசில்லறைகள் என்று கூறி அற்பமாகக் கருதாது வஹியை மாத்திரம் பின்பற்றுவதேஅழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நேசிப்பதாக அமையும்.மேலும், திருமறைக் குர்ஆன் கூறுகின்றது. ‘(முஹம்மதே!) உம் இறைவன் மேல்ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று,பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல்,முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 4:65)மீலாது விழாவின் தோற்றம்இஸ்லாமிய வரலாற்றில், அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்களின் காலம் முதல்ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை மீலாத் விழா கொண்டாடப்படவில்லை. ஹிஜ்ரிநான்காம் நூற்றாண்டில் தாங்கள் பாத்திமா(ரழி) அவர்களின் பரம்பரையினர்எனப் போலியாக வாதிடக் கூடிய, அலி(ரழி) அவர்களே நபித்துவத்திற்குதகுதியானவரர்கள் என்றும், விரல் விட்டு எண்ணக் கூடிய சில நபித்தோழர்களைவிட ஏனைய நபித்தோழர்களை காபிர்கள் எனவும் வாதிடக்கூடிய‘பாத்திமிய்யாக்களினால்’ எகிப்தில் ஆட்சி நிறுவப்படுகின்றது.‘அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ்’ என்கின்ற யூதனின் சந்ததியினரேஇவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.மக்களை தம்பக்கம் கவர்வதற்காகவும், தமது ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் பாத்திமிய்யாக்களின் நான்காவது ஆட்சியாளனான ‘அல்முயிஸ்லிதீனில்லா ஹில் உபைதி’ என்பவனால் அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்களின்பெயரிலும், பாத்திமா (ரழி), அலி(ரழி), ஹுசைன்(ரழி), ஹஸன்(ரழி) ஆகியோரின்பெயரிலும், ஆட்சியாளர் ஹாழிர் (பாத்திமிய்யாக் களின் நம்பிக்கையின்அடிப்படையில் ஹிஜ்ரி 230ல் பிறந்து இன்று வரை மறைவாக உயிர் வாழ்ந்துகொண்டிருப்பவர்) என்பவர் பெயரிலும் மீலாத் விழா(பிறந்த நாள்)கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது.எனவே, இந்த மீலாத் விழாக் கொண்டாட்டங்கள், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காகத்தான் தோற்றுவிக்கப் பட்டவையேயன்றி அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்)அவர்கள் காட்டித் தந்த வழிமுறை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.மார்க்கம் நிறைவு செய்யப்பட்டு விட்டது‘அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள்(துல்ஹஜ் 10ஆம் நாளில் மக்காவில்)மக்களுக்கு உரை நிகழ்த்தி னார்கள். அப்போது இது எந்த நாள் என்பதுஉங்களுக்குத் தெரியாதா என்று கேட்டார்கள். மக்கள் அழ்ழாஹ்வும் அவனுடையதூதருமே நன்கு அறிந்த வர்கள் என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள்வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம். (அந்த அளவிற்குமௌனமாக இருந்தார்கள்) பிறகு இது நஹ்ர் உடைய(துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவாஎன்று கேட்டார்கள். நாங்கள் ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே என்று சொன்னோம்.நபியவர்கள், இது எந்த ஊர் இது புனித நகரமல்லவா என்று கேட்டார்கள்.நாங்கள் ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே! என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள்,அவ்வாறாயின் (புனிதம் வாய்ந்த) உங்களது இந்த நகரத்தில் உங்களுடைய(புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்குஉங்கள் உயிர்களும் உங்கள் செல்வங்களும் உங்களது மானமும் உங்கள் உடல்களும்உங்களுக்குப் புனிதமானவையே என்று கூறிவிட்டு, ‘(நான் வாழ்ந்த இதுகாலம்வரை உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா எனக்கேட்டார்கள். நாங்கள் ஆம்(தெரிவித்துவிட்டீர்கள்) என்று பதிலளித்தோம்.பிறகு நபி(ஸல்) அவர்கள் இறைவா! நீயே சாட்சி என்று சொன்னார்கள்.’ பிறகு(மக்களிடம்) இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்.ஏனெனில், இச்செய்தியை(ப் பிறருக்கு)த் தெரிவிப்பவர்களில் எத்தனையோ பேர்தம்மைவிட அதை நன்கு நினைவிலிருத்திக் கொள்பவரிடம் தெரிவிக்கலாம் என்றுகூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-7078)மேலுள்ள நபிமொழி அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள் மார்க்கத்தில் மிகச்சிறியதொரு விடயத்தைக் கூட விட்டு வைக்காது இறைச்செய்திகள் அனைத்தையும்எத்தி வைத்துவிட்டார்கள் எனக்கூறுகின்றது. மீலாத் விழா மார்க்கத்தில்உள்ளதுதான் என ஒருவர் வாதிடுவாராயின் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்தமது தூதுத்துவப் பணியை சரியாக நிறைவேற்றவில்லை எனவும், மீலாது விழாபோன்ற மார்க்கத்தில் உள்ள விடயங்களை அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள்சொல்லாது விட்டுவிட்டார்கள் என்பதாகிவிடும். மேலும், அருளாளன் அழ்ழாஹ்தனது அருள்மறையில் கூறுகின்றான்.‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக் காக நிறைவு செய்து விட்டேன்.எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)மீலாத் விழா மார்க்கத்தில் உள்ளதுதான் என வாதிடும் போது மேலுள்ள அருள்மறைவசனத்தை மறுத்தவர்களாக ஆவதோடு, மார்க்கம் முழுமைப்படுத்தப் படாதது என்றுகூறுகின்ற பெரும்பாவத்தில் ஈடுபட்டவர்களா கின்றோம். (இவ்வாறுவாதிடுவதிலிருந்து அழ்ழாஹ் எம்மனைவரையும் காப்பாற்றுவானாக!)மாற்று மதக் கலாசாரத்திற்கு ஒப்பாதல்பிறந்த நாள் கொண்டாடுவது கிறிஸ்துவ சமுதாயத்தினரின் கலாசாரமாகும். ‘யார்பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தைசார்ந்தவரே என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: அபூதாவுத்-4033)மேற்படி நபிமொழியைப் படித்த பின்பாவது மீலாத் விழாவினை ஆதரிக்கக் கூடியசகோதரர்கள் கிறிஸ்த்தவர்களுக்கு ஒப்பாகக் கூடிய மீலாத் விழாகொண்டாட்டத்தை விட்டொழிக்க முன் வர வேண்டும்.மீலாத் விழா புது வழியே!மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த நபிவழியல்ல. மாறாக, மனிதர்கள் தங்களது உலகாயுத நோக்கங்களுக்காகஉருவாக்கிக் கொண்ட புது வழியே என்பதை அறிந்து கொண்டோம். இவ்வாறுமனிதர்களாக மார்க்கம் என்ற பெயரில் தூதரை கேலி செய்யும் விதமாகபுதுவழிகளை தோற்றுவிப்பது தொடர்பாக அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின்பின்வரும் நபிமொழி இவ்வாறு எடுத்தியம்பு கின்றது.அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த(மார்க்க)விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடையஅந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்:ஸஹீஹுல் புஹாரி-2697)‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில்மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும்.காரியங்களில் தீயது(மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும்.புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொருபித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டுசேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: நஸயீ-1560)மேலுள்ள நபிமொழி மீலாத் விழாவும் அது தொடர்பான நிகழ்வுகளும் எம்மைநரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. இன்னும், நாம்மீலாத் விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதானது இந்த மார்க்கத்தின்சொந்தக்காரனான அழ்ழாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறைஇவ்வாறு எடுத்தியம்புகின்றது.‘உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ் வுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)இன்று இம்மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் ஊர்மட்டங்களில் வழக்கொழிந்துபோய்விட்டாலும் கூட பாடசாலை மட்டங்களில் இஸ்லாத்தின் இனிய போதனைகள்விதைக்கப்பட வேண்டிய மாணவப்பருவத்தினரின் பிஞ்சுநெஞ்சங்களில் இம்மீலாதுஎனும் அநாச்சாரமும், அந்நிய சமூகங்கள் மீது மோகத்தை ஏற்படுத்தும் இத்தீயகலாசாரமும் விதைக்கப்படுவதையிட்டு பொறுப்பாளர்களும், பாடசாலைஅதிபர்களும், ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் மாணவசமூகமும் விழிப்பாக இருக்க வேண்டும்.இறுதியாக, மீலாத் விழாவை ஆதரிக்க கூடிய சகோதரர்களே! நீங்கள் உண்மையில்அழ்ழாஹ்வையும் அவனது தூதர்(ஸல்) அவர்களையும் நேசிக்ககூடியவர்களாயிருந்தால் இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட மீலாத்விழா போன்ற அனாச்சாரங்களை விட்டொழித்துவிட்டு, அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களது தொழுகை முறை எவ்வாறு இருந்தது? நோன்பு மற்றும் பெருநாள்வணக்கங்களில் தூதர்(ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது?பிரார்த்தனையின் போது தூதரின் வழிமுறை எவ்வாறு இருந்தது? அன்றாடநடவடிக்கைகளில் தூதர்(ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது? எனவாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அற்பமானது, சிறியது, பெரியது எனக்கருதாதுஅருள்மறைக் குர்ஆன், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரப்பூர்வமானநபிமொழிகள் மூலம் அறிந்து பின்பற்றுவதனூடாக தூதர்(ஸல்) அவர்கள் மீதானஉண்மையான நேசத்தை வெளிப்படுத்துவோமாக!