Translate

Pages

Sunday, June 16, 2013

இன்றில்லா அன்றுகள்!


ஈர்க்குச்சுருக்கு ஓணான் வேட்டை

ஊரெல்லை தாண்டிய கிட்டிப்பொல்லுப்பாட்டம்

ஊர் கூடி ரசித்த நாயும் இரைச்சித்துண்டும், கட்டைப்பந்து, ஜம்....

ஊர் முழுக்க வியாபித்தோடிய கள்ளன் பொலிஸ்

ஓதப்பள்ளியில் ஓடி விளையாடிய உத்தரவோ 'அங்கால சுங்கான் இங்கால கெழுத்தி".....

பெத்தாட வளவு நொண்டியாட்டம்

தென்னை மட்டை மாட்டுப்பட்டி

வாகனக்கனவிற்கு தீனி போட்ட 'டயர்' 'பில்டர்' 'ரிம்'....................."அரே............ அரே...."

வில்லுக்கு வீணாகிய பறவைக்குஞ்சுகள்

அங்கால வட்டையோட வில்லடிப்போர்

பனங்காடு - வல்வட்டி பாசமான  பனிப்போர்

பல்லுக்குத்த உதவிய கிடுகு வேலி ஈர்க்கு

குடும்பமே கூடிழைத்த கிடுகு

ஊரே கூடிக்கட்டிய கிடுக்கூரை

பனம்பழம் பொறுக்கிய அதி அதி காலை

முற்றத்து பனங்கிழங்குப்பாத்தி

சேறு பூசிய குடாக்குளியல்

  தூஷணம் துதிபாடிய குழாயடிச்சண்டை

கோடைகாலத்து குடங்களின் அணிவகுப்பு

மேட்டுவட்டை களியால் செய்த யானயும் புறாவும்

தென்னையில் தொங்கிய தூக்கணாங்குருவி

கூட்டமாய் வந்த நெற்குருவிகள்

வானத்தில் கோலம் போட்ட நாணற்பறவைகள்

வெள்ள கால தூண்டில் வேட்டை

அனைவரும் போன "சூழ்" மீன் வேட்டை

வட்டையோரத்து தென்றல் தந்த தூக்கம்

 விடிவுகளை தூரமாக்கிய வீணர்சந்தி பந்தி

 அதிகாரியின் அகங்காரகுரல்கள்
"நாளைக்குப்பெரு நாளாம்........", "லாயிலாஹ இல்லல்லாஹு......",        
 "கூலூ இன்னாலில்லாஹி........."

 மோதினாரின் கவச வாகனம்

சஹரை அலங்கரித்த கிட்டங்கித்தாத்தா

நோன்பு கால கஞ்சித்தொழுகை

வித்ருக்கு முந்திய ஹவ்ழு சலசலப்பு

பெருநாளை சிறப்பித்த

பள்ளியடி சிறுவர் சந்தை


Monday, June 10, 2013

சந்தை பொறுக்கிகள்!




சந்தைக்குள் சத்தம்,
சாமானுக்காக சாமர்த்தியம்!
சத்தமின்றி சாந்தமாக
சந்தை பொறுக்கி மாடுகள்!

எச்சிலுக்கும்
எறிந்தவற்றுக்கும்
ஏந்தினிற்கும் -நம்
எம்பிகள்!