Translate

Pages

Tuesday, October 28, 2014

தேடியோடு



தடுப்பது தண்ணீரைத்தான்
தாகத்தையல்ல

எழுந்துநில்
தேடியோடு

பேராண்மை பேசுகிறது
பெரும்பான்மை

சும்மா கிடைத்ததினால்
சோம்பேறியாயிருந்தாய்
தாகம் தெரியவில்லை
தண்ணீரருமை புரியவில்லை

எழுந்துசெல்
தேடியோடு

தமக்கென கொண்டிருக்கும்
தண்ணீர் சுனையை
நாளைய சந்ததியாவது

தடுப்பது தண்ணீரைத்தான்
தாகத்தையல்ல

எழுந்துசெல்
தேடியோடு

Wednesday, May 28, 2014

ஜனநாயகம்





தக்(thug)களுக்காக 
மக்களைக்கொண்டு

தக்களே செய்யும் ஆட்சி!



பேருக்கென்னவோ ஜனஞாயம்

யாருக்குமிங்கேது நியாயம்!

ஊருக்கெம்பி வேணுமென்றிருந்தோம்

யாருக்கும் லாபமில்லையிங்கு
பேரோடு முடிஞ்சி போச்சி!



யாது செய்யினும் பிரச்சினை

ஏதும் எனக்கில்லை அடுத்தமுறையும்

யானே தளபதி என்கிறார் -நாமும்

ஏனோ ஜனநாயகமென்கிறோமின்னும்!



நோக்கு முழுவதுவும் அடுத்த கதிரை- கொடுத்த

வாக்கு யாவும் அடுத்தமுறை வரையும்

தேக்கு நிலையிலிருக்க நம்பி

வாக்கு போட்ட மாந்தரிற்கு

ஏக்கமட்டுமே எஞ்சிக்கிடக்குதிங்கு!





ஆட்சியதிகாரபோதை அரசனாட்டம் போடவைக்குது

அடக்குமுறையும் அடாவடியும் அரசாளமுனையிது

மீட்சி வேண்டிநிற்கும்மக்காள் நாடுவதுவோ -உறு

மீனைக்காத்திருக்கும் எதிர்க்கட்சியிடமல்லோ!

Saturday, April 19, 2014

பள்ளிப்பாசம்.



பள்ளிமதில் உடைக்கப்படுகிறது,
பாதை விஸ்தரிப்பாம்!
பள்ளிமதில் உடைக்கப்படுகிறது,
பள்ளிக்கு வந்தவரெல்லாம்
பக்குவமாக பார்த்தபடி செல்கிறார்.
பரதேசிகள் இரண்டு,
பாதையோரம் பேசிக்கொள்கின்றன,
"பாரிந்த அநியாயத்தை,
பள்ளிமதிலை உடைக்கிறானுகள்",ஆஹ்,
பக்திமான்கள் பதறுகிறார்கள்?
பள்ளிமதிலென்ன பள்ளியையே உடைத்தாலும்
பரதேசிகளுக்கென்ன கவலை
பள்ளிக்கு போகாதவரை?