Translate

Pages

Thursday, November 12, 2015

ஆரோக்கிய வழி!

நித்தம் தொழு
நிம்மதி பெறு

சுத்தம் பேணு 
சுகதேகம் பெறு

உடநலம் பேணு 
உளநலம் காணு 

கபடம் கழை 
கண்ணியமாய் உழை 

மாற்றானை மதி 
மன்னித்து பழகு 

வேளைக்கு உறங்கு
விடியுமுன் விழி 

கலோரி கணி 
கனவளவு பணி 

நடந்து போகான்
நடக்கப்போவான் 

கண்டது கொண்டான்
நொண்டியனாவான் 

வைத்தியமென்பது வெறும் 
வேதியமல்ல 

பத்தியம் காத்து 
பக்குவமாய் வாழ்வது

Thursday, September 17, 2015

அஷ்ரப் சதுக்கம்!



முன்னெப்போதுமில்லாதவாறு அஷ்ரபை நினைவுபடுத்துவதில் முனைப்புக்காட்டப்படுவதை அவதானிக்க முடிகிறது. உண்மையிலேயே அன்பு வைத்து நினைவூட்டிக்கொள்ளும் கொள்கைக் காரர்களுக்கிடையில், எதிர் நோக்கும் உள்ளூராட்சிமன்ற தேல்தல்களை நோக்கிய கொள்ளைக்காரர்களின் போலி வேசமும் நினைவூட்டலை உத்வேகம் கொள்ளச்செய்கிறது. அஷ்ரபை நினைவூட்டுவதன் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதிலேயே பலரும்  முனைப்பாயிருப்பது வேடிக்கையாகவிருக்கிறது. இத்தனைக்கும் ஒரே காரணம் சொந்த செயற்பாடுகளில் நம்பிக்கையில்லாத அரசியல் முதுகெலும்பின்மையேயாகும்.

இவ்வாறான நிலையில் ஒரு வரலாற்று நிகழ்வினை மீட்டிப்பார்க்கிறேன்..,

 அது 1993/94 காலப்பகுதி டீ.பீ.விஜேதுங்க அப்போதைய ஜனாதிபதி, அரசியல் காய் நகர்த்தல் நடவடிக்கையாக தள்ளிப்போயிருந்த  கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பை செய்கிறார். உசுப்பேத்தல் தந்திரத்தில் உயர்ந்த நிலையிலுருந்த அஷ்ரப் அரசியல் எதிர்காலத்தை நன்றாக கணக்குப்பார்த்து சவாலொன்றை விடுகிறார்.

"அம்பாரையின் முஸ்லிம் பெரும்பாண்மை பிரதேச சபைகளில் ஒன்றையாவது தோற்றால் எனது பாராளூமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன்".

இதுதான் சவால். கணக்கின் தீர்வு; சவாலை வென்றாலும் வெற்றி, தோற்றாலும் வெற்றி.


உசுப்பப்பட்டது, முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள்(?) மட்டுமல்ல அன்றைய பிரதான எதிரியான ஐ. தே. க யினரும்தான். ஐ. தே. க வின்
உள்ளூர் பிரபலங்களுக்கு மேலதிகமாக ஏசிஎஸ் ஹமீத், அஸ்வர், எம் எச்
 முஹம்மத் உட்பட அக்கட்சியின் முழு பலத்தோடு அதிகார பலமும் பிரயோகிக்கப்பட்டது.

இதேர்தலில் தமிழ் கட்சிகள், இயக்கத்தாரின் எதிர்ப்புகள் காரணமாக போட்டியிடுவதிலிருந்து விலகியிருந்தததனால், தமிழ்மக்கள் அஷ்ரபை பழி தீர்க்க ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த முனைந்தனர்.  இதனை சாதகமாக்கிய மன்சூர் உட்பட்ட ஐ தே க யினர் மதுவினை காட்டி தமிழ் மக்களை கவருவதில் கவனம் செலுத்த தொடங்கியிருந்தனர். நிலைமையின் பாரதூரத்தை விளங்யிய தக்பீர் மந்திர போராளிகளும் அதே உக்தியை பயன்படுத்த முனைந்தமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. (தக்பீரில் களப் போராளிகள் திளைத்திருந்த வேளை  தலைமைப்போராளிகள் பலர் தண்ணியில் திளைத்திருந்தமை வேறு விடயம்).

அஷ்ரப் சூறாவளிப் பிரச்சாரத்தின் (அவ்வேளை அவ்வாறுதான் அழைக்கப்பட்டது) உச்சக்கட்டமாக ஹெலிக்கொப்டரில் ஊரூராக பறந்து கொண்டிருந்தார். அதன் ஒரு கட்டமாக எனது நற்பிட்டிமுனை கிராமத்திலும் ஹெலிகொப்டர் இறங்க ஏற்பாடாயிருந்தது. ஆலையடிச் சந்தியில் கூட்டம் ஏற்பாடாயிருக்க பக்கத்திலிருந்த சிறு வளவினை ஹெலிகொப்டர் அனுபவமில்லாத எம்தூர் போராளிகள்(?) இறங்குதளமாக ஆயத்தம் செய்திருந்தனர். அஷ்ரபோடு ஹெலிக்கொப்டரையும் பார்த்துவிடலாமென்ற ஆவலில் பலரும் காத்திருக்க, இறங்காமல் வட்டமிட்டுக்கொட்டிருந்த ஹெலி திடீரென அண்மித்து வந்து காணாமற் போனது. மீண்டும் தென்பட்ட ஹெலி தூரமாய் பறந்து மாயமாய் போனது. எல்லோருக்கும் ஏக்கம் கலந்த ஏமாற்றம் "அஷ்ரபுமில்லை", "ஹெலியுமில்லை".  சோபையிழந்த கூட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. திடீரென ஆலையடி வடக்கு வீதிப்பக்கம் சலசலப்பு. ஆமாம் அஷ்ரப்??? அது அஷ்ரப் தான் வீதியில் நின்ற இருவரின் வழித்துணையோடு கூட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.  ஏற்பாடாயிருந்த வளவு பொருத்தமில்லாதலால் சில நூறு மீட்டர்கள் உள்ளேயிருந்த மையித்துப்பிட்டியில் இறங்கி மதிலேறி
தன்னந்தனியே வந்தவரை வீதியிலிருந்த இருவர் கூட்டம் நோக்கி கூட்டி வந்திருந்தனர். சோபையிழந்த கூட்டம் இந்த சுவாரசிய நிகழ்வினால் பன்மடங்கு உற்சாமடைந்தது. நிகழ்வும் வரலாற்று நினைவானது.

இதனோடு சேர்த்தாற்போல் மற்றுமொரு வரலாற்று நிகழ்வும் பதிவானது. கூட்டத்தில் வரவேற்பு உரையாற்றிய மூத்த போராளி இப்ராஹிம் வைத்தியர் சமயோசிதமாக ஒரு வேண்டுகோளை வைத்தார். "எமதூருக்கு ஹெலி இறங்குவதற்கு ஒரு மைதானம் தேவை".  அஷ்ரபும் ஏற்றுகொள்ள  எமதூரின் இளைஞர்களின் அற்பணிப்புகளுடன்  "அஷ்ரப் சதுக்கம்" என்ற பெயரில் (அஹ்ரபின் பெயரின் உருவான முதல் மைதானம் என அப்போது பிரச்சரம் செய்யப்பட்டமை நினைவிருக்கிறது) மைதானம் உருவாவதற்கான முதற்கட்ட வேலைகள் முடுக்கி விடப்பட்டன.

பரிதாபம் அஷ்ரப் பெயரில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட அஷ்ரபின்
அந்த வரலாற்று நிகழ்வுடன் சம்பந்தப்பட்ட மைதானம், அஷ்ரபின் வாரிசுகளாக பிதற்றிக்கொள்ளும் அஷ்ரபை நினைவு கூறுவதில் தன் புகழைபறைசாற்றும்  அரசியல் வாதிகள் (கட்சி பேதமின்றி கிட்டத்தட்ட எல்லா நிகழ்கால அரசியல் வாதிகளும்) போட்டி போட்டுக்கொண்டு அபிவிருத்தி செய்ய வேண்டிய அந்த மைதானம், கவனிப்பாரற்று கிடப்பது மனதிற்கு வேதனை அளிப்பதோடு வேடிக்கையாகவும் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அஷ்ரபின் அரசியல் மற்றும் இரத்த வாரிசாக பறைசாற்றும் ஒருவர் இந்த மைதானத்தின் செயற்பாடுகளுக்கு நேரடி உரிமை கோரும் மாநாகர முதல்வர் பதவியில் இருந்தும் (அவர் இருப்பதுதான் பிரச்சினையோ என எண்ணுமளவிற்கு)  பிரயோசனம் இல்லாமல் போனமை மேலும் வருத்தமளிக்கும் விடயமாகும்.  மாறாக முந்நாள் முதல்வரும் இந்நாள் விளையாட்டி பிரதியமைச்சருமான பிரதேச பாராளுமன்ற உறுப்பினர், முதல்வராக இருந்த காலத்தில் செய்த மடத்தனமான செயலினால் செயலிழந்து போயிருக்கும் திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு தற்காலிக தீர்வாக குப்பை கொட்டும் திடலாக மாற்றிய பெருமை இந்த அஷ்ரபின் வாரிசையே சாரும் என்பது கசப்பளிக்கும் உண்மை.

Thursday, June 18, 2015

பாகப்போராட்டமும் சின்னத்தம்பியும்


முட்டுக்கொடுக்க
முண்டியடிக்க வேண்டியவர்கள்- அவர்கள்
கட்டியணைத்து கனிவு
கொடுப்பாரென்றிருந்தேன்....

பாகப்பிரிவினையில் மோதிக்கொள்ளும்
பெரியண்ணர்கள் - இந்த
பாவப்பட்ட கடைக்குட்டியை....

தட்டிக்கழித்து
எட்டி உதைக்கின்றார்
தட்டிகேட்க நாதியில்லை 

தட்டிக்கொடுப்பாரெவருமில்லை.........

சாய்த்திருக்க ஓரமாய்
மருதமர முனையாயினுமில்லை
குடியிருக்க கற்குகையின்
முனையாயினுமில்லை............

பொதுவான பங்குமில்லை
பாகத்திலும் உரிமையில்லை
பக்கத்து ஊட்டானின்
பாதையோரம் படுப்பதற்கோரிடம் தேடி.........

சொந்த பந்தங்கள் பாராமுகங்காட்ட
சொந்தங்காலில் எழுந்து நிற்க
சிந்தனை செய்து நிற்கும்
சின்னத்தம்பி
நமுனையூரான்.........