Translate

Pages

Wednesday, August 25, 2010

அழகு!



கோழியின் கூவலும் பூவழகும் ஆணுக்கு!
குயிலின் குரலழகும் ஆணுக்கு!
மயிலின் தோகையழகும் ஆணுக்கு!
மாட்டின் ஏரியும் எடுப்பும் ஆணுக்கு!
சிங்கத்தின் சடையழகும் ஆணுக்கு!
யானயின் கொம்பழகும் ஆணுக்கு!
எமக்குமட்டும் ஏனிந்த வேறுபாடு?
இல்லையில்லை நாம் தான் உணரமறுக்கிறோம்!

Wednesday, August 11, 2010

வீடு: ஒரு பார்வை





அனாவசியத் தேவையாக்கப்பட்ட ஓர் அத்தியாவசியத் தேவை
***
தேவையை மிஞ்சிய அநாகரிக அலங்காரம்
***
தளத்திலொரு மூலை வசிப்பிடம் தட்டுக்களோ ஜந்துகளின் புழுதி, வாசஸ்தலம்
***
இத்தனை அடுக்குகளும் அறைகளும் காரணம் புரியவில்லை: ஊரோடு ஒத்தோடு
***
கட்டிடக் கலைஞரின்(?) கைவரிசை கடைசியில் ஒட்டுண்ணி வலைகளின் சீர்வரிசை
***
மொத்தப் பொருளாதாரத்தின் புதை குழி
***
வாழ்நாள் வருமானத்தின் வீணான விதைப்பிடம்
***




Wednesday, March 24, 2010

ஏன் என்னைத் தடுத்தார்கள் வகுப்பறையே!

***
உன் அரவணப்புக் கிடைத்ததை "தவிர்க்க முடியாத தவறாக" எண்ணினார்களோ?
***

Friday, February 12, 2010

ராஜ சேவை.

சம்பளம் நிரந்தர வருமானம்
கிம்பளம் பிரதான வருமானம்.
***
மயிர் பிடுங்க மணித்தியலங்கள்- கவனித்தால்
மலை பிடுங்கவே மணித்துளிகள்.
***
சட்டம் மதிக்கப்பட வேண்டும்
சனம் மிதிக்கப்பட்டாலும்.
***
ஊதியம் உரிமை
வேலைக்கு வேண்டும் வேறாக.
***
அரசியல் வாதி நாடா வெட்ட
அருகில் டை கட்டி கை தட்டு
அழைக்கப்பட்ட சிரிப்பைக் காட்டி
***
சுயமாய் சமளிக்க முடியாதவர்களின்
சுதந்திர சுற்றாடல்.
***
பெண்டிருக்கு பரிந்துரைக்கப்பட்ட
பொருத்தமான புகலிடம்.
***
அரசியல் ஆதிக்கம், மேலிடத்தின் அதிகாரம்
அடங்கினால்போதும் அடுக்கடுக்காய் அலுவலிருந்தாலும்
அஞ்ச அவசியமில்லை.
***
வெளியார் சேவையில் வெடுக்கென வேலை
அரச சேவையில் அலட்சிய அரைமனதுடன் ஆறுதல் சேவை. வைத்தியத்துறை மெத்தான உதாரணம்.
***
அனைத்துமிருக்க கடின வேலைகளுக்கு கொந்தூரத்து
ஆளுக்காள் வீதாசாரத்தில் விளையாட்டு.
***
வேண்டாத செய்முறைச் சிக்கல்கள்
வீணாய்ப் போகும் மக்கள் சொத்துகள்.
***
வாயிழந்து வழியின்றி தவிக்கும்
வரியிறுப்பாளர் சமுதாயம்.
***

Friday, February 5, 2010

வறட்டுக்கௌரவச் சிக்கல்

காருக்குப் பெற்றோல் நிரப்ப ஓ டீ யிலும் பீபீயிலும் வீணாகும் வாழ்க்கை,
சில பத்து மீற்றர் தூரத்துப் பள்ளிக்குக் கூட நடக்க முடியாத சிக்கல்,
நடைப்பயிற்சி வேண்டி மிசின் வாங்கும் நிலை,
சில வேளை பள்ளிக்கே போக முடியாத பாபம்,
சனத்திற்கு முன்னால் சாதாரணமாய் நிற்க,
நடக்க முடியாத அவதி,
சாளை மீன் பொரியலும் சுங்கான் சுண்டலும் ருசிக்க இயலா பரிதாபம்,
மார்க்கட்டில் மலிவாய் வாங்க முயாம -fபூட் சிட்டியில் மாட்டு,
இன்னும் இன்னோரன்ன அவதிகள், சிக்கல்கள், மாட்டுகள், பரிதாபங்கள்,................
படித்தோரே!
மீண்டு வாருங்கள் இந்தப் பரிதாப வறட்டுக் கௌரவத்திலிருந்து..........

Tuesday, January 5, 2010

பதவி!

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள் நீங்கள் அதைக் கேட்டுப் பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." ஆதாரம்: புகாரி