Translate

Pages

Wednesday, March 23, 2022

தொழுகையும் பொறுமையும்

நொறுக்கத்தான் நினைத்தனர் பொறுத்துதான் ஒதுங்கினோம் நொறுங்கியே நொந்தனர் நெருங்கியினி வருவினர் #தொழுகையும்_பொறுமையும்_போதுமான_ஆயுதம் https://www.facebook.com/bishrullah/posts/10209982245268829?comment_id=10209988263659285¬if_id=1648000084217595¬if_t=feed_comment&ref=notif

Saturday, March 12, 2022

புளகாங்கிதம்

புளகாங்கிதம் இருக்கட்டும் பானையோடு பொங்கிவிட்டால் அடுப்பும் அடுத்தவரும் பங்கிற்கு பச்சத்தண்ணிதான் சக்கையாகி மிச்சம் பானையில் உள்ளூரும் பூரிப்பு போதும் சில்லூரி சத்தம் செவிப்பறைக்கு சேதம் #புகழேந்திகளின்_படுகுழி In FB on 12th March 2022

Wednesday, March 9, 2022


ஒவ்வொரு இடியிலும்
இடிந்து வீழ்வோம் என்றா நினைத்தாய்
இன்னுமின்னும் இறுக்கம் பெற்று
உறுதி கொள்கிறோம் புரிவாய்
சதி செய்வதிலேயே உன் சிந்தனைகளெல்லாம்
சீரழிந்து கிடக்க
சிதறிக்கிடந்த எம் ஈமானின் உணர்வுகள்
சீர்பெற்று சிறப்படைந்துது கொண்டுதான் இருக்கின்றன
எம் ஈமானின் சிந்தனைக்கு முன்னே உன்
சாமானிய சிந்தனை ஒரு சாமானா
புரிகின்ற அந்நாளில்
நீயும் எம்மணியின் முன்னணி உறுப்பினராகியிருப்பாய்
இன்ஷா அல்லாஹ்!
ஹிதாயத் உன்னையும் ஒரு நாள் வந்து சேரும்
அது நாள் வரை எம் தியாகங்கள் தொடரும்.......

In FB on 23 Dec 2020

கன்னியும் காவலனும்


Shared with Publ
கன்னியும் காவலனும்
"""""""""""""""""""""""""""""

கனநாளா காத்திருக்காள் கன்னி
கலியாண கனவுகளுடன்
காளையரின்
காதல் தூதும்
கலியாண யோசனையும்
கலைந்து போக
காடையரின்
கல்லெறியும் பொல்லடியும்
மஹரோடு மணவாளர் மலிந்திருக்க
கைநிறைய சீதனத்தை கறந்தெடுத்து
கல்லாக குந்திரிக்கான் காவலுக்கு
காலாகாலமா
சீர்சிறப்பும் செப்பும்
மணநாளும் குறித்திருப்பார்
சீசனுக்கு
சில நாளில்
கும்பகர்ணம் மீளவரும்
சீசனும் முடிந்திருக்கும்
பக்கத்து ஊராரின்
பரிதாபங்களுக்கும்
கர்ச்சிக்கும் காவல் ஜீவன்
உறங்கு நிலை உறவினரோ
செய்வதறியா
கனநாளைய கனவுகளுடன்
கல்மனத்தாள் - கன்னி

In FB on  9 October 2021

 

 கட்டுக்கும் அடங்கா காளை
கட்டவிழ்த்து கொண்டது
குத்தி குதறல்கள் கண்ட இடமெல்லாம்
கத்தி கதறல்கள் கொண்ட பயனில்லை
அடங்கவா போகிறது #காளை





Shared with Public
ஏற்றுவதில் தானே
ஏச்சும்பேச்சும்!
ஏங்கவிட்டு ஏறவிடுது
ஏற்புடையாயிற்று!

In FB on 9 October 2021 

 களவெடுத்து மகிழுகிறார் வேந்தர்

கடனிறுத்து மாழுகிறோம் மாந்தர்

In FB on 20 Oct 2021

 சத்தத்திற்கு தெரியவில்லை அவனது

கட்டத்தின் எல்லைக்குள் அடங்கிவிட
சட்டத்திற்கு முடியவில்லை
சத்தத்தை சாந்தம் செய்ய
கொண்டாடுகிறான் யேசுவை
திண்டாடுகின்றன போதனைகள்
சிலுவை சுமந்த பாவங்கள் பாரியவை
இரு மில்லேனியம் கடந்தும் இன்னும்
ஈசாவின் வழியின் பொறுமையில்
பேசாமல் புரள்கிறேன் தூக்கம் தேடி

In FB on 26 Dec 2021

ஆக்கிரமித்துக்கொள் ஆங்கிலேயனே

 ஆக்கிரமித்துக்கொள் ஆங்கிலேயனே

.........................................................
உனை நாமா விரட்டினோம் இல்லை நீதானே விட்டு சென்றாய் உதாசீனர்களிடம்
ஆக்கிமித்துக்கொள் ஆங்கிலேயனே
நீயிருக்கும் காலம் வரை உனக்கு மட்டுமாயிருந்த எம் தேசம் எம்மை தவிர மற்றெல்லோருக்கும் ஆகிவிட்டதே- மீண்டும்
ஆக்கிரமித்துக்கொள் ஆங்கிலேயனே
இங்கிலீசு படிப்புரிமை பறிகொடுத்தோம்
சுதேச தொழில்முறையும் விட்டகன்றோம்
உலகோடு நாம் ஒத்திசைக்க எமை
ஆக்கிரமித்துக்கொள் ஆங்கிலேயனே
அவன் பிழைவிட இவன் என்றோம்
இவன் பிழைவிட அவன் என்றோம்
ஏழு தசாப்தம் கடந்த பின்னர்
எழும்பவேலா படுகுழியில் விழுந்த பின்னர்
உணர்ந்து கொண்டோம் நாம் மீள
ஆக்கிரமித்துக்கொள் ஆங்கிலேயனே
சுரண்டியது சிறிதளவே உன்னாட்சி
சுருட்டியது எவ்வளவோ சுயவாட்சி
சீனாவின் விளைநிலமாம் சிறீலங்கா
இந்தியனும் இடம்தேடி இன்னொரு பங்குக்காம்
இருக்கின்ற பலசாலி எல்லாரும்
துடிக்கின்றார் தமக்குமொரு பங்காம்
வழிப்போக்கருக்கெல்லாம் வாசல் துறந்த வேசையாயிலும்
வாழ வழிகாட்டும் ஒருவருக்கு வப்பாட்டியாதல் மேலாதனால் எமை
ஆக்கிரமித்துக்கொள் ஆங்கிலேயனே


In FB on 13 January 2021

வி(மர்)சனப்பார்வை

 வி(மர்)சனப்பார்வை

-------------------------------------
வானொலி, முன்பெல்லாம் மொழியறிவை வளர்த்துக்கொள்வதற்கு முன்மாதிரியாக இருந்தது என்றால் அது மிகையாகாது. அறிவிப்பாளர்கள் அனைத்தும் அறிந்தவர்கள் என்ற பிரம்மை எமக்கு இருந்தது. அந்தளவிற்கு தேடல்களும், முன்னேற்பாடுகளும், தயாரிப்புகளும், அறிவிப்பு பாணியும் அபாரமானதாக இருந்தன.
இப்பொதெல்லாம் நிலைமை தலைகீழாக போயிருப்தை அவதானிக்க முடிகிறது. ஏதோ வேறு தொழில் செய்ய வழியில்லாததால் வந்து சேர்ந்து விட்டோம் என்கிறாற் போல் இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தில் அறிவுப்புகள் செய்யப்படுவதாகவே எண்ணத்தோன்றுகிறது. எழுவாய்க்கும் பயனிலைக்கும் சம்பந்தமே இல்லாமலும், ஒருமை பன்மை பேணுதலின்றியும் சப்பை கொட்டிக்கொண்டிருக்கின்றனர். ஏதோ வந்தோம், சொன்னோம், நேரம் கடத்தினோம் என்ற தோரணையில் கடகட வண்டியோட்டம் சகிக்க முடிவதில்லை. எந்தவொரு சம்பந்தமுமில்லாமல் சில சொற்களும் வசனங்களும் அடிக்கடி உச்சரிக்கப்படுவது எரிச்சலுக்கு எண்ணை ஊற்றுகின்றன. மூன்று சொற்களில் முடிகின்ற வசனங்கள் சம்பந்தமேயில்லாத அல்லது பொருத்தமேயில்லாத அடை மொழிகளாலும் இடுமொழிகளாலும் சின்னாபின்னமாக்கி ஜூம்மாக்களில் நேரம் கடத்தும் அதிகப்பிரசங்கிகளை ஞாபகமூட்டி கொண்டிருக்கின்றன.
மகிழ்ச்சிகர செய்தியையும் மரணச்செய்தி தோரணையில் வாசிக்கும் நேத்திராவும் மரணச்செய்தியையும் மகிச்சியாக அறிவிற்கும் தனியார் அலைவரிசைகளும் அறிவிப்பில் உயிரோட்டத்தை தொலைத்து நிற்கின்றன.
மொழியின் ஆற்றலை வளர்க்க எமது கால ஆசிரியர்கள் செய்திகளை கேட்கத்தூண்டிய காலம் போய், பிழைகள் எவ்வாறெல்லாம் விடப்படலாம் என்பதற்கு உதாரணமாக கொள்ள செய்தி அறிக்கைகள் மிகச்சிறந்த சாதனம் என்ற நிலைக்கு தள்ளிவிட்டுள்ளனர்.
இந்த 'விடயத்தில்' மற்ற எல்லோரையும் தள்ளி விட்டு வசந்தத்தின் சுயாதீன செய்திப்பார்வை முன்னே நிற்கிறது. அதன் அறிவிப்பாளர்கள், ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இர்பானின் வேகத்தை பிரதியீடு செய்யப்போய் மற்ற எல்லாவற்றையும் தொலைத்து நிற்பது தெளிவாகத்தெரிகிறது. மேலே சுட்டிக்காட்டிய அனைத்திற்கும் உதாரணமாக இந்த நிகழ்ச்சியை கொள்ளலாம்.
எம் இதயங்களில் என்றும் வாழ்கின்ற BH போன்றோர் இன்னும் உயிர் வாழ்கின்ற நிலையில் உயிரோட்டமின்றி உலவும் ஊடகத்துறைக்கு உயிர் கொடுக்கும் காலம் கரைந்து விடவில்லை. திறைமையானவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வழி நடாத்தப்படுமானால் மீண்டும் உயிர் பெறலாம் என்பது நம்பிக்கையும் அவாவுமாகும்.

In FB on 23 January 2022

In Dependant's வளா

 In Dependant's வளா

----------------------------------
அராபிய எரிபொருள்
ஜப்பானிய வாகன அணி
இஸ்ரேலிய கிபீர்
ரஷிய ஹெலி
அமெரிக்க பயிற்சி
இந்திய கலாச்சாரம்
சீன சீலைக்கொடி
பங்காளத்திலும் கடன்
அனைத்தும் அடுத்தவன் தயவில்
சிங்களத்தில் தானாம் கீதம்
வாயாற வளவளா சுதந்திரம்
தொண்ணூற்றொம்பதாண்டு
குத்தகை தேசத்தில்
In FB on 04 Feb 2022

 அங்க-தனத்தை எதிர் பார்த்தார்

சிங்கத் தனத்தை எதிர் வினைத்தாள்
யாரங்கே சொன்னது சிறைக்கூ டமென்று
பாரங்கே எம்மாது போர்க்கவசமன்றோ
அனாச்சாரம் காத்திட கர-வேசம்
கலாச்சாரம் காத்திட்ட வீர கோசம்

 பன்டோரா போல் கொள்ளை

பனடோல் கூட இல்லை
வற்றிய குளத்து மீனாம் பிடிப்பது
பற்றிய சட்டி ஆணம் வழிப்பது
ஒறுப்பானது டொலர்கனம்
வெளுப்பானது கரும்பணம்

In FB on 23 Feb 2022

தீயான தணல்

 தீயான தணல்

-------------------------

கூதலுக்கு தான் வைத்தீர் தணல்
ஊதலின் உக்கிரம் தீயாகி எரிக்கிறது
ஆதலினாலினி மோதல் வேண்டாமெனும்
காதலின் கோரல்கள் காலம் கடந்தவை