Translate

Pages

Wednesday, April 25, 2012

முற்போக்காய் முன்மாதிரியாய் முன்னேறுவோம்!


எனது ஓர் அனுபவத்தைப் பகிர்வதன் மூலம் தொடங்க விரும்புகிறேன். பாதை விஸ்தரிப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும் போது நிர்வாகிகளின் ஒப்புதலுடன் பள்ளிமதிலொன்று உடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மாற்றுமததினர் சம்பந்தப்பட்டிருந்ததனால் அவ்வேளை நான் பிரசன்னமாயிருக்க வேண்டப்பட்டிருந்தேன். அஸ்ர் அதானும் ஒலித்தது  தொழுகையும் தொடங்கி முடிந்தது மீண்டும் வேலைக்கு மீண்டு வந்திருந்தேன். தொழவந்தவர்கள் எவரும் எதையுமே அலட்டிக்கொள்ளவில்லை அமைதியாச் சொன்று கொண்டிருந்தனர். பாதையோரம் இருவர் பள்ளிக்குச் செல்லவில்லை தங்களுக்குள் பேசிக்கொள்கிறனர் "பள்ளியின் பதிலை உடைக்கிரான்கள்" பாருங்கள் என்ன அநியாயம்.

தம்புள்ளை பள்ளிவிடயத்திலும் இது நடக்கலாம். இது போன்ற தார்மீகத் தகுதியற்றவர்கள் பாதைக்கு வரலாம். குறிப்பாக ஜும்மா மட்டும் தொழுகைக்காரர்கள்; மாற்று மததவர்கள் மீது அசிங்கமாகக் கூக்குரல்களிடலாம், அவர்களின் சிலைகளின் மீதோ, வழிபாட்டிடங்களின் மீதோ கல்வீசுகளும் நடத்தலாம். விளைவு அந்த பேரினவாதிகளின் கனவுகளை நிஜமாக்க உதவக் கூடியாதாக  அமைந்துவிடக்கூடியது.

தம்புள்ளை விவகாரம் இரண்டுவகையான தீர்வைக் கொண்டது;

முதலாவது பள்ளிய இடம்மாற்றுவது. இதுவே எதிர்த்தரப்பாலும் ஏற்றுக்ககொள்ளப்பட்டது. இந்ததீர்வைப் பொறுத்தவரையில் மேலோட்டமாக நாம் தோற்றுப்போவதாக தோன்றுகிறது. ஆனால் அறுபதுகளில் தொடங்கப்பட்டதாக் கூறப்படும் பள்ளி இதுவரை காலத்திற்கும் தகரக் கொட்டில் அளவிற்கே வளர்ந்திருக்கிறது. இந்ததீர்வு அதற்கும் தீர்வைத்தரும். வேண்டிய உயரத்திற்கு பள்ளியைக் கட்டிக் கொள்ளலாம். அதைச்சுற்றி கூச்சமோ அச்சமோ இன்றி கிராமத்தையயே உருவாக்கிக் கொள்ளலாம். இங்கு ஒரு மாற்று வாதம் முன்வைக்கப்படலாம். முன்பு அனுராதபுரத்தில் மௌனியாகவிருந்தோம், இப்போது தம்புள்ளையில் நிற்கிறது. விட்டுக் கொடுத்தால், மேலும் உத்வேகம் பெற்று மற்றய இடங்களிலும் கைவப்பர். அனுராதபுரத்தைப் பொறுத்தவரையில் நாம் செய்ய வேண்டியதை அவர்கள் செய்தார்கள். மக்களிடம் அது பற்றிய போதியஅறிவு  இருந்ததால் சில கீச்சுக் குரல்களைவிட பொதுவாக உள்ளூரப்பூரித்துக் கொண்டோம். தம்புள்ளை விடயத்தில் விட்டுக் கொடுத்தால்? இதற்கான விடையை அடுத்த தீர்வில் ஆராயலாம்.

இரண்டாவது தீர்வாக நாம் விடாப்பிடியாக நிற்பது. முதலில் ஒன்றை நாம் நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும். இங்கு பிரச்சினையை உண்டுபண்ணுவது ஒட்டு மொத்த சிங்கள பௌத்தர்கள் அல்ல. பெரும்பாண்மையான பெரும்பாண்மையினர் நம்மை மனதார ஆதரிக்கின்றனர். நமது விடாப்பிடி அந்த உள்ளங்களை இழப்பதற்குக் காரணமாகிவிடலாம். மேலும், நமது விடாப்பிடி அந்தக் கலகக்காரர்களை கட்டிப் போடப் போவதில்லை. அவர்கள் பயந்து ஓய்ந்து விடப் போவதுவுமில்லை.
ஆக மொத்தத்தில்  இந்தப் பிரச்சினையின் தோற்றம் நாம் முற்போக்காக முடிவுகள் எடுப்பதன் மூலம் நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதோடு மாற்று மதத்தவர்களின் உள்ளங்களையும் வெற்றி கொள்ளக் கூடியதாகவும் அமையும்.
நாம் நபியை முன்மாதிரியாகக் கொண்டவர்கள். ஹுதைபியா உடன்படிக்கையில் நமக்கு நிறையவே முன்மாதிரியான பாடங்கள் உள்ளன. ஏன் அண்மைய நம் நாட்டு வரலாறும் சான்று பகர்கிறது. புலிகளுக்குச் சாதகமாக ஏற்படுத்தப்பட்ட ரணில்-பிரபா ஒப்பந்தம் புலிகளின் ஒழிவிற்கு காரணமாய் நின்றது.
இறைவனே நன்கறிந்தவன்.......

No comments:

Post a Comment