Translate

Pages

Tuesday, December 13, 2022

புட்போலும் நானும்

 அப்போதிருந்தே புட்போல் மீது நாட்டம் குறைவுதான். புட்போல் விளையாடிய சந்தர்ப்பங்களை எண்ணி சொல்லலாம். அதன் சட்டதிட்டங்கள் எதுவும் தெரியாது.

ஒரு தடவை நண்பர்கள் புட்போல் விளையாடிக்கொண்டிருந்த இடத்திற்கு தற்செயலாக செல்ல நேர்ந்தது. ஆள் பற்றாக்குறை காரணமாக நண்பர்களின் வற்புறுத்தலில் களம் இறங்க நேர்ந்தது. எனக்கு தெரிந்தது எல்லாம் எதிரணியின் திசையை நோக்கி பந்தை உதைப்பது தான். கோல் போஸ்ட் அருகே நின்று கொண்டிந்த என்னை நோக்கி பந்து வர அதை நானும் திருப்பி விட " கோ....ல்". உற்சாகம் புட்போல் மீது இனம் புரியாத பற்று, எல்லாம் வந்த வேகத்தில் அதே கணத்தில் பறந்து போயின, "ஓஃப் சைட்" என அந்த அந்த கோல் நிராகரிக்கப்பட்ட போது. "போங்கடா, நீங்களும் உங்க புட்போலும்", என அன்று வெளியேறிய களம் , கடைசிக் களமாகவும் அமைந்து போனது.
என்னதான் நாட்டம் குறைவாக இருந்தாலும் உலகக்கோப்பை என்று வரும் போதெல்லாம் ஒருவகை உற்சாகம் பிறக்கத்தான் செய்யும். தெரிந்ததெல்லாம் ரொனால்டோவும் மெஸ்ஸி யும் தான். நமது பயல்கள் ஆப்கானித்தானிடம் மண்டியிட்ட போது கிரிக்கெட்டில் இருந்த ஆர்வம் சற்று குறைந்து புட்போல் மீது திரும்பியிருந்தது. சவூதி, மொரோக்கோ, டியூனிசியா, ஜப்பான் போன்ற அணிகலன்கள் பிரகாசித்த போது ஒருவகை உத்வேகம் கலந்த ஆர்வம் பிறந்திருந்தது.
ஆனாலும், ஒன்றரை மணித்தியாலங்கள் ஓடித்திரிந்தும் முடிவுகள் ஒன்றுமேயில்லாமல் போனபோது அந்த ஆர்வம் மங்கத்தொடங்கியிருந்தது. முதலாம் சுற்று முடிந்து நொக்கவுட் சுற்றுகள் தொடங்கிய போது, நிலைமை மேலும் கீழிறங்கி போனது நியாயம் தான். இருபத்தியிரண்டு பேரும் முழு நேரமும் ஓடியும் அததைவிடவும் அந்த ரெபரி ஓடியும் கடைசியில் முடிவு உதைக்கின்ற ஒருவனினதும் பிடிக்கின்ற ஒருவனினதும் கைகளின் மீது மட்டுமே தங்கியிருப்பது சகிக்க முடியாதது.
புட்போல் மீது மீண்டது நாட்மின்மை. "பழைய குருடி கதவைத்திறடி"

No comments:

Post a Comment